Shreeammanpoultryfarm

Shreeammanpoultryfarm Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shreeammanpoultryfarm, Pet service, newstreet, Tiruchendur.

14/06/2016

நாட்டு கோழி வளர்க்கும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அரசாங்கத்தால் கொடுக்கப்படும் மாணியம் மற்றும் அதற்கு உண்டான சில வகை இந்த வருடமும் தொடரும் மேலும் விபரங்கள் அறிய உங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு சென்று அறிந்து கொள்ளுங்கள்

Ready for nattukoli egg sales
09/06/2016

Ready for nattukoli egg sales

12/05/2016
15/03/2016

நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்
கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்.

தேவையான பொருட்கள்

1. ஒரு பழைய பானை

2. கிழிந்த கோணி/சாக்கு

3. காய்ந்த சாணம்

4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்

கரையான் உற்பத்தி செய்முறை

மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது.

ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம்.

கரையான் செயலாற்றும் முறை

இங்கு குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும். (Dandy wood termites) மேலும் கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது.

பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும்.

கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன.

சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் அமைந்ததால், காலம் காலமாக தென் தமிழ்நாட்டு மக்களால் கரையான் உற்பத்தி செய்யப்பட்டது. இச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல் நன்மைகள் ஏற்படுவது தெரியவந்தது.

நன்மைகள்

கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்துள்ளன. கரையானைப் பிடித்து அழிப்பதற்குப் பதில் கோழிக் குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம்.

அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது அல்லவா?

முடிவாக கரையான் உற்பத்தி என்ற எளிய செலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் மூன்று பயன்கள் விளைகின்றன.

1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.

2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.

3. பூச்சிக் கொல்லிக்கு என்று செலவு கிடையாது. பூச்சிக் கொல்லி மருந்து தேவையில்லாததால் நமது சுற்றுப் புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

இன்றே செயல்படுங்கள், மாலை செயல்பட்டால் மறுநாள் காலை உங்கள் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான கரையான் கிடைத்துவிடும்

நாட்டுக்கோழி இனம் காக்க 15நிமிடம் நேரம் ஒதுக்குங்கள் Facebook whatup 10குருப் Share செய்யவும்.சேவல் சண்டையும் பன்னாட்டு ...
17/01/2016

நாட்டுக்கோழி இனம் காக்க 15நிமிடம் நேரம் ஒதுக்குங்கள் Facebook whatup 10குருப் Share செய்யவும்.

சேவல் சண்டையும் பன்னாட்டு நிறுவனங்களின் அரசியலும்

பன்னாட்டு நிறுவனங்கள் என்றைக்கு விவசாயத்துறையில் கால் பதித்ததோ அன்றே நமது பாரம்பரிய விளைபொருட்களின் விதைகளை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கி அதிக உற்பத்தி என்ற சூழ்ச்சியான கோசத்துடன் நமது விவசாயிகளை ஏமாற்றினார்கள். அதன் விளைவாக இன்று நமது பாரம்பரிய சிறுதானியங்கள் நெல்வகைகள் காணாமல் போயின.
அதே வழியில் விவசாயிகளுக்கு துணையாக வருவாயுடன் விவசாயத்திற்கு துணையாக இருக்கும் கோழிகளை அழிப்பது .
மற்றும் கறிக்கோழி இனம் என்ற பன்னாட்டு நிறுவனங்களின் கோழிகளை விற்பனை செய்வது என்ற திட்டத்தோடு பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய நாட்டுக் கோழிகளை அழிக்க கையாண்ட மற்றுமொரு சூழ்ச்சிதான் கோழிசண்டைக்கு தடை.
நேருக்கு நேராக மூஞ்சியில் குத்தி கொலை செய்வது விளையாட்டு, கண்மூடித்தனமாக பந்தை எரிந்து கொலை செய்வதும் விளையாட்டு ஆனால் கோழிகளை வைத்து விளையாண்டால் குற்றமாம். இதைக் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய கேட்கும் அமைப்புகள் பன்னாட்டு நிறுவனங்களிடம் விலைபோயின விவயாயிகளுக்கும் மக்களுக்கும் எதிராய் செயல்பட்டு இருக்கின்றன.
நாட்டுக் கோழிகளை அழித்தால் தான் பிராய்லர் கோழி வளர்ப்பு பெருகும் அதற்கு தீவனமாக மருந்தாக பன்னாட்டு நிறுவனங்களின் இரசாயன வியாபாரம் பெருகும். இந்த வியாபார நோக்கம் தான் நாட்டுக் கோழி அழிப்புக்கு காரணமானது.
நாட்டுக் கோழிகள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவை, வளர்ப்பது எளிது. இக் கோழிகளை நமது விவசாயிகள் வளர்ப்பதால் பன்னாட்டு இரசாயன வியாபாரம் நடப்பது தடைபடும் . மேலும் கோழியின் கழிவுகள் சிறந்த எருவாகவும் விவசாயிக்கு உதவியதால் இரசாயன உரங்களின் தேவையும் பூச்சிகொல்லிகளின் தேவையும் குறைவாக இருந்தது. இந்த வியாபாரங்களைப் பெருக்க நாட்டுக் கோழிகளை அழிப்பதே அந்நிறுவனங்களின் இரசாயனம் மற்றும் மருந்துகள் விற்பனையை அதிகப்படுத்த அந்நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும்.
இப்படி நிறுவனங்கள் செயல்படும்பொழுது விவரமானவர்கள் எதிர்க் கேள்வி கேட்டு விட்டால் அவர்களின் வாயை அடைப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமே சி எஸ் ஆர் திட்டம் அதாவது வரிவிலக்கு பெற்று லஞ்சம் கொடுத்து மக்களுக்கு பொய்யான பிரச்சாரம் செய்ய தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள எதிர்ப்பாளர்களை பணத்தால் விலைக்கு வாங்கிட சமூக சேவை என்ற பெயரில் நிறுவனங்கள் அதிகாரம் பெற்றுள்ளன. ஆனால் இது மக்களுக்கு மிகுந்த பயன் அளிக்கின்றது என்று பொய்க்காரணம் கூறி. ஆகவே இந்த தொகைக்கு வரி விலக்கு வேறு.
தரமான சேவல்களை அழிக்காமல் நாட்டு கோழிகள் இனத்தை அழிக்க இயலாது. ஆகவே கிராமங்கள் தோறும் கறிக்கோழி குஞ்சுகள் இரசாயனக் கலவை பூசி கலர் கலராக குறைந்த விலைக்கு கொடுக்கப்பட்டு மக்களை மயக்கி வளர்க்க தூண்டியது. இதன் மூலம் தரமான நாட்டுக் கோழிகள் வளர்ப்பை குறைத்தது.
அடுத்ததாக நாட்டுக் கோழி முட்டைகளை விட பிராய்லர் முட்டைகளை குறைந்த விலையில் விற்றது மட்டுமல்லாமல் பிராயிலர் கோழி முட்டைகள் கொழுப்பு அற்றது புரதம் நிறைந்தது என்றும் விளம்பரம் செய்து சக்கையை சாப்பிடுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள் என்றது . மருந்துகளால் சேவலின் துணையின்றி முட்டைகளை இட வைத்து விற்பனை செய்து லாபம் பார்ப்பது. அம்முட்டைகளே நல்லது என்று விளம்பரம் செய்து மக்களை வாங்கத் தூண்டியது.
எனினும் நாட்டுக் கோழிகளை விட பிராய்லர் கோழிகள் உற்பத்தியிலும் விற்பனையிலும் அதிகரித்துவிட்டதே இப்பொழுது எதற்காக இப்படி பன்னாட்டு நிறுவனங்கள் சதி செய்யவேண்டும் என்ற கேள்வி எழுவது சரிதான்.?
பன்னாட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை தனது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி முதலில் சந்தையில் போட்டியை உருவாக்கும் . அங்கு நாங்கள் நல்லவர்கள் என்று நிரூபிக்கும் பொய் பிரச்சாரங்களை அரங்கேற்றி, அதன்பிறகு போட்டியான தயாரிப்புகளை முடக்கும். இதுவே அந்நிறுவனங்களின் தொடர் வெற்றிக்கு காரணம்.
மனித உடல் நலனுக்கு கேடு விளைகின்றது என்பதால் கறிக்கோழிகள் எதிர்காலத்தில் மக்களால் ஒதுக்கப் படலாம். ஆகவேதான் தான் நாட்டுக்கோழிகள் உண்பதை வைரஸ் பரவுகின்றது என்ற புரளியும் தற்பொழுது பரப்புரை செய்யப்படுகின்றது.
மேலும் எப்பொழுது வேண்டுமானாலும் நாட்டுக் கோழிகள் சந்தையில் போட்டிக்கு மீண்டும் வந்துவிடக் கூடும். இந்த பயம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருந்தால் வியாபாரம் நிம்மதியாக செய்ய இயலாமல் போகின்றது. பயத்துடன் தொழில் செய்வதை பன்னாட்டு நிறுவனங்கள் எப்பொழுதும் விரும்ப மாட்டார்கள்.ஆகவே நாட்டுக் கோழி உற்பத்திக்கு உதவும் சேவல்களை அழிக்க வழிதேடி வெற்றியும் பெற்றார்கள். சேவல் சண்டைக்கு தரமான சேவல்கள் வளர்க்கப்படுவது மட்டுமல்ல அவை இனப்பெருக்கத்திற்கு உதவி நல்க தரமான நாட்டுக் கோழிகள் உருவாகவும் காரணமாக இருக்கின்றான்.
பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார தந்திரங்களின் காரணமாக எதிர்காலத்தில் மிருகங்களைக் கொல்வது குற்றம் என்று நமது நாட்டில் சட்டம் போட்டுவிட்டு அவர்கள் ஏற்றுமதி செய்யும் பதப்படுத்தப்பட்ட ஆடு மாடு கோழிக் கறிகள் நமக்கு கிடைக்கலாம்
நாட்டு கோழிகள் அழிப்புடன் கலப்பினக் கோழிகள் உருவாக்கம் பிராய்லர் கோழி வளர்ப்பில் புகுத்தப்படுகின்றது. இவைகள் நாட்டுக் கோழிகள் என்று சொல்லி விற்பனையும் செய்யப்படுகின்றது

பிரபல கம்பெனிகள் இதில் கால் பதிக்க தொடங்கி விட்டர்கள்
வெள்ள முட்டை 4₹ விற்கும் போது அதே உற்பத்தி செலவில் Brown கலர் முட்டையை நாட்டு முட்டை என்று கூறி 10₹ விற்பனை செய்கிறார்கள்

இதை சென்னையில் உள்ள பல Organic store விற்பனை செய்கிறார்கள்

மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்,
வண்ண பிராய்லர் கோழிகளை நாம் யாரும் வளர்க்க கூடாது, அதற்கு கம்பெனி தீவனம் போட்டு அது விடும் முட்டை நாட்டு முட்டை என்று கூறி விற்பனை செய்ய கூடாது.
அது மாகபாவம் காரியம்.அப்படி செய்தால் அதற்கு தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்.
இந்நிலையில் தரமான நாட்டு சேவல்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் போட்டிக்கு காரணமாக அமையும்
சேவல் சண்டைக்கு வளர்க்கப்படும் சேவல்கள் தரமான நாட்டு சேவல் ஆகும் . இந்த சேவல்கள் இருக்கும் வரை எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் நாட்டுக் கோழிகள் சந்தையில் போட்டிக்கு வர வாய்ப்புள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் வியாபாரம் பாதிப்படைய வாய்ப்புள்ளது. ஆகவே நமது முன்னோர்கள் வீர விளையாட்டு என்ற பெயரில் தரமான மாடுகள் கோழிகள் உற்பத்தி குறையாமல் இருக்கவும் அவர்களது விளையாட்டுக்கள் பயன் அளித்தது.ஆகவே பன்னாட்டு நிறுவனங்களின் பிராய்லர் கோழி விற்ப்பனைக்கு எதிர்காலத்தில் நாட்டுக் கோழிகள் போட்டியாகி விடவே கூடாது என்பதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சியே சேவல் சண்டை தடை.
இதற்கு துணையாக சமூக சேவை அமைப்புகளும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பிச்சை வாங்கிப் பிழைக்கும் தேச துரோகிகளும் எதிர்கால சமூகத்தை அளிக்கும் இந்த இழிவான செயலை நியாயப்படுத்தி நமது விவசாயிகளுக்கும் நமது மக்களுக்கும் எதிரான பன்னாட்டு நிறுவனங்களின் செயலுக்கு துணையாய் இருந்து நமது பாரம்பரிய கோழி வளர்ப்புக்கு துரோகம் செய்துள்ளார்கள். இவர்கள் செய்த துரோகம் அறியாத பாமர மக்கள் இவர்களின் அமைப்புகளுக்கு நன்கொடையும் கொடுத்து அவர்கள் அழைக்கும்போதெல்லாம் சென்று அவர்களுக்கே சலாம் போடும் கேவலமும் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றான.
இந்திய விவசாயிகளின் நண்பனான நாட்டுக் கோழிகளை ஒழிப்பது, நாட்டு மாடுகளை ஒழிப்பது, இந்திய விவசாயிகளை விவசாயத்தில் இருந்தே விரட்டுவது . பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே இனி இந்தியாவில் விவசாயம் செய்யும் அதற்க்கு துணையாக உலக வர்த்தக அமைப்பின் விவசாய ஒப்பந்தம் 1995 இன் திருத்தம் 2013 இன் படி இந்தியா கையெழுத்து இட்டுவிட்டது.
அந்த ஒப்பந்தம் அடிப்படையில் பன்னாட்டு விவசாய விளைபொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு வரி நீக்கம்.
பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்கிக்கொள்ள வசதியாக புதிய நிலங்கள் கையகப் படுத்தும் சட்டம் திருத்தம். அதாவது அரசு நிலங்களை நிறுவனங்களுக்கு வாங்கிக் கொடுக்கும் பகுதியில் உள்ள 80 சதவீத விவசாயிகள் ஆதரவு அளித்தால் மட்டுமே அந்நிலங்களை வாங்கலாம் என்ற விதிமுறையை மாற்றிவிட்டார்கள். ஆகவே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விவசாய நிலம் நிறுவனங்களுக்கு தேவை என்றால் அந்த நிலத்தின் சொந்தக் காரர்கள் கொடுத்துவிட வேண்டும் இல்லையேல் அவர்கள் தேச விரோதிகளாக்கப்படுவார்கள்.

நாட்டுக்கோழி இனம் தமிழ்நாட்டு இரண்டு முக்கிய இனம் உள்ளது.
1)சிறுவிடை நாட்டுக்கோழி இனம்
2)பெருவிடை நாட்டுக்கோழி இனம்

இந்த இனம் காக்கும் பொறுட்டு சிறுவிடை நாட்டுக்கோழி ்.வைத்து குஞ்சு பொறித்து விற்பனை செய்கிறோம் சிறுவிடை நாட்டு முட்டை சென்னையில் விற்பனைசெய்து வருகிறோம் தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரத்துக்கு முட்டை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளோம் குறைந்தது 100முட்டை வாங்கி கொள்ள வேண்டும

பிராய்லர் முட்டை தவிர்போம், போலி நாட்டுக்கோழி முட்டை தவிர்போம். இயற்கை திறந்த வேளி மேயும் நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுவோம்.
வருகாலம்உங்கள் உங்கள் குழந்தை ஆரோக்கியத்தை காப்போம்
இந்த செய்தி பார்போர்களிடம் பணிவன வேண்டுகோள்
இந்த செய்தி Facebook Whatup மூலம் அதிகமாக Share செய்யவும்
நாட்டுக்கோழி இனம் காக்க பாடுபடுவோம்

நாட்டுபசு இனம் ,கோழி இனம் அழிவின் விழிம்பில் உள்ளது இதை காக்க உங்களால் முடிந்த அளவு share செய்யவும்
மாட்டுபொங்கல் இன்று நாட்டு மாடு. ஆடு.கோழி இனம் காக்க அனைவரையும் வேண்டி கொள்கிறோம
நன்றி
இது லாபம் நோக்கம் கருதி வெளியிடவில்லை.நாட்டு இனம் காக்க பட வேண்டி செய்தி வெளிஇடுகிறோம் shree Amman poultry farm 9952831890

01/01/2016

அசோலாவின் பயன்கள்:
அசோலா வளர்ப்பும்- அதன் பயன்கள்.
அசோலா பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். பெரும்பாலும் பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை மூக்குத்திச் செடி அல்லது கம்மல் செடி என்றும் அழைப்பர்.
இதில் புரதச்சத்து 25-35%, தாதுக்கள் 10-12% மற்றும் 7-10% அமினோ அமிலம் கார்போஹைட்ரேட் எண்ணெய் சத்துக்கள்.
தேவையான பொருட்கள்:
(6’X3’, தினம் 500கி-1 கிலோ உற்பத்தி செய்ய போதுமானது)
1. செங்கல் - 30-40 கற்கள்
2. சில்பாலின் பாய் - 2.5 மீ நீளம், 1.5மீ அகலம் (அ) 6’X3’
3. செம்மண் - 30 கிலோ
4. புதிய சாணம் - 30 கிலோ
5. சூப்பர் பாஸ்பேட் - 30 கிராம் (அ)
அசோஃபெர்ட் - 20 கிராம்
6. தண்ணீர் - 10 செ.மீ. உயரம் (சராசரியாக 6-9 குடம்)
7. அசோலா விதை - 300-500 கிராம்
8. யூரியா சாக்கு - தேவையான எண்ணிக்கை (6’X3’ ச.அடியை நிரப்ப)
அசோலா வளர்ப்பு முறை:
இடத்தைத் தயார் செய்தல்:
1. மர நிழலில் (நேரடி சூரிய ஒளி ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது) இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும்.
2. இடத்தின் அளவு 6’X3’ இருக்க வேண்டும்.
3. புல் பூண்டுகளை அகற்றி இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
4. இடம் குண்டும் குழியுமாக இல்லாமல் சம தளமாக்க வேண்டும்.
5. புல் பூண்டுகள் வளருவதை தடுக்க யூரியா சாக்கினை பரப்பவும்.
செய்முறை:
1. செங்கலை குறுக்கு வாட்டில் தயார் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் வைக்க வேண்டும்.
2. அதன் மேல் சில்பாலின் பாயை பரப்பி விட வேண்டும்.
3. சில்பாலின் பாயின் மீது 10-15 கிலோ செம்மண்ணை சம அளவில் பரப்பி விட வேண்டும்.
4. தண்ணீரின் அளவு 10 செ.மீ உயரம் வரும் வரை சுமார் 6-9 குடம் ஊற்ற வேண்டும். ஊற்றுவது குடிநீராக இருக்க வேண்டும்.
5. புதிய சாணம் 2 கிலோ மற்றும் 20 கி அசோஃபெர்ட் (அ) 30 கி சூப்பர் பாஸ்பேட் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
6. 500-1000 கிராம் சுத்தமான அசோலா விதைகளை போட்டு அதன் மேல் லேசாக தண்ணீர் தெளிக்கவும்.
வளர்ச்சி:
1. விதைத்த 3 நாட்களில் எடை மூன்று மடங்காக பெருகும்.
2. பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும்.
3. 15 நாட்கள் கழித்து நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.
பராமரிப்பு:
1. தினந்தோறும் குழியிலுள்ள அசோலாவினை கலக்கி விட வேண்டும்.
2. தண்ணீன் அளவு 10 செ.மீ. க்குக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
3. 5 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ புதிய சாணம் மற்றும் 20கிராம் அசோஃபெர்ட் (அ) 10 கிராம் ( ஒரு தீப்பெட்டி அளவு) சூப்பர் பாஸ்பேட் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
4. 10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். பதிலாக சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும்.
5. மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை வெளியேற்ற வேண்டும். பிறகு சுத்தமான சலித்த செம்மண்ணை இட வேண்டும்.
6. 6 மாதத்திற்கு ஒரு முறை அசோலா விதைகளை தவிர அனைத்து இடுபொருட்களையும் வெளியேற்றி புதியதாக இட வேண்டும்.
தீவனம் அளிக்கும் முறை:
1. தினமும் 500கிராம்- 1 கிலோ அசோலாவை எடுத்து நீரில் அலசிக்கொள்ள வேண்டும்.
2. பச்சையாகவோ அல்லது பதப்படுத்தியோ அல்லது அடர் தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம்.
3. உணவு உப்புடன் சேர்த்தும் அளிக்கலாம்.
4. வைக்கோலுடன் சேர்த்தும் அளிக்கலாம்.
பயன்கள்:
1. 1 கிலோ அசோலா 1 கிலோ புண்ணாக்கிற்கு சமம்.
2. அசோலாவை உட்கொள்வதால் பால் உற்பத்தி 15-20% அதிகரிக்கும்.
3. பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பு அல்லாத சத்துக்கள் அதிகரிக்கிறது.
4. கோழிக்கும், வாத்திற்கும் தீவனமாக பயன்படுத்தலாம். அதிக எடை கிடைக்கும்.
5. உணவு உப்புடன் சேர்த்து பன்றிகளுக்கு அளித்தால் பன்றியின் எடை கூடுவதுடன் இறைச்சி தன்மையும் நன்றாக இருக்கும்.
6. முயல்கள் அசோலாவை விரும்பி உண்ணும்.
7. அசோலா வளர்க்கும் இடத்தில் கொசுத் தொல்லை இருக்காது.
வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள்
1. தண்ணீர்:
அசோலாவனது தண்ணீர் ஊற்றி வறண்டுவிட்டால் உடனே இறந்து விடுகிறது.
2. ஈரப்பதம்:
காற்றின் ஈரப்பதம் 85-90% இருக்கும்போது அசோலா நன்கு வளர்கிறது. ஈரப்பதம் 60%ற்கு குறையும்போது வறண்டு இறந்துவிடுகின்றது.
3. சூரிய ஒளி:
கோடைக் காலங்களில் பகல் நேரங்களிலுள்ள அதிக சூரிய ஒளி அசோலாவை பழுப்பு நிறமாக மாற்றிவிடுகின்றது.
4. காற்று:
வேகமாக வீசும் காற்றானது பாத்திகளிலுள்ள அசோலாவை ஒரு பக்கமாகக் கொண்டு சேர்த்துவிடும். இதனால் அசோலாவின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.
5. மண்ணின் கார அமிலத் தன்மை:
காரத் தன்மையுள்ள மண்ணில் அசோலாவின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நுண்ணூட்டச் சத்துக்களுக்கு ஏற்ப அசோலாவின் வளர்ச்சி மாறுபடுகின்றது.
http://www.indian-farms.com
கால்நடை, கோழிகளுக்கு சிறந்த தீவனம் அசோலா
அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் அசோலாவைத் தங்கள் தோட்டங்களிலேயே வளர்த்து கால்நடை மற்றும் கோழிகளுக்கு தீவனமாக வழங்குவதன் மூலம் நல்ல உற்பத்தி பெறலாம்.
இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் க. சுப்பிரமணியன் மற்றும் உதவிப் பேராசிரியர் வெ. தனுஷ்கோடி கூறியது: "அசோலா தண்ணீரில் மிதக்கக்கூடிய பெரணி வகையைச் சேர்ந்த தாவரமாகும். இதை விவசாயிகள் உயிர் உரமாக நெல் வயலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 25 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளது. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் ஆகிய சத்துகள் இதில் உள்ளன. பீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் ஏ உருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்து அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை நாம் உண்பது கண்பார்வைக்கு நல்லது.
அசோலா உற்பத்தி முறைகள்: நிழல்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைத்து, பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் காகிதத்தை சீராக விரிக்கவும். பாலீத்தீன் காகிதத்தின் மேல் 2 செ.மீ. அளவுக்கு மண் இட்டு சமப்படுத்தவும். இதன்மேல் 2 செ.மீ. அளவுக்கு தண்ணீர் ஊற்றவும். பின் பாத்தி ஒன்றுக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5 கிலோ அசோலா தாய் வித்து இடவேண்டும். நாள்தோறும் காலை அல்லது மாலை வேளையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துகள் தண்ணீரில் கரைத்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கும்.
15 நாள்களில் ஒரு பாத்தியில் (10ஷ் 2ஷ் 1 அடி) 30 முதல் 50 கிலோ அசோலா தாயாராகி விடும். மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டு எஞ்சிய 2 பகுதியை அறுவடை செய்யலாம். 10 நாள்களுக்கு 1 முறை பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. பூச்சித்தொல்லை வந்தால் 5 மில்லி வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளிக்கவும். அசோலாவின் உற்பத்தி கோடை காலங்களில் சிறிது குறைந்தும், மழைக்காலங்களில் அதிகரித்தும் காணப்படும். மூன்று அல்லது நான்கு பாத்திகள் அமைத்து தினமும் அசோலாவை அறுவடை செய்து கால்நடை மற்றும் கோழிகளுக்குச் சத்து நிறைந்த சுவைமிகுந்த உணவாகப் பயன்படுத்தலாம்.
அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கால்நடை மற்றும் கோழிகளுக்குப் பயன்படுத்தலாம். அசோலாவை பச்சைத் தீவனமாக முதன் முதலாகப் பயன்படுத்தும் பொழுது கால்நடைகள் அவற்றை உண்பதற்கு தயக்கம் காட்டலாம். ஆகையால் ஆரம்பகட்டத்தில் அசோலாவைத் தவிடு, புண்ணாக்கு அல்லது பிற அடர் தீவனத்துடன் கலந்து மாடுகளுக்குத் தீவனமாகப் பழக்கப்படுத்த வேண்டும்.
அசோலாவின் பயன்கள்: அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை, அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிட அதிகமாக உள்ளது.
அதிசயம் தந்த அசோலா
அசோலாவில் புரதம், அமினோ அமிலம், கால்சியம், வைட்டமின்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அதிகம் உள்ளன. அசோலாவில் காய்ந்த நிலையில் 30 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் 20 சதம் அமினோ அமிலம் உள்ளதால் கால்நடைகளுக்கு செரிமானச் சக்தி தருகிறது.
விளைநிலங்களுக்கு: அண்டை மற்றும் மேலை நாடுகளில் நெல் விளையும் பகுதிகளில் அசோலாவையும் பயன்படுத்தி தழைச்சத்தை நிலைப்படுத்துவதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். நஞ்சை நிலத்தில் விளையும் நெல்லுக்கு அசோலா உயிர் உரமாக பயன்படுகிறது. இது ஒரு ஏக்கருக்கு 3-4 கிலோ வரை தழைச்சத்தை தரும். இது காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்து நெற்பயிர்களுக்கு கொடுக்கும். வயல்களில் களை வளராது. மேலும் யூரியாவினால் எந்த அளவு பயன் உண்டோ அந்த அளவிற்கு பயன் உண்டு. மேலும் மற்ற உரங்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக அசோலா பயன்படுத்துவதன் மூலம் இயற்கை நெல் உற்பத்தி செய்வதுடன் மண்வளமும் பாதுகாக்கப்படும்.
இனிவரும் காலங்களில் இயற்கை வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு அதிகம் விலை கிடைக்கும். மேலும் சப்போட்டா, மாதுளை செடிகளுக்கும் அடி உரமாக அசோலாவைப் பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும்போது அதிகப் படியான மகசூல் கிடைக்கும். மேலும் விளைச்சல் பல மடங்கு பெருகும்.
ஆக நெல் விவசாயிகள் மற்றும் பழவகை உற்பத்தியாளர்கள் செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கை உரமான அசோலாவை பயன்படுத்தலாம். இது எல்லா வகையிலும் பயன்படுவதாக அமையும். செலவுகுறைவு. மண்வளம் காத்தல் போன்றவயாகும்.
கால்நடைகளுக்கு: மீன்: மீன் பண்ணைகள் இப்பொழுது பலர் வைத்துள்ளனர். அசோலா அங்கும் பெரும்பங்கு வகிக்கின்றன. மீன் குஞ்சு விட்ட 35 நாட்களுக்கு மேல் 1000 குஞ்சுகளுக்கு தினமும் 2 கிலோ வரை பரவலாக தூவ வேண்டும். இதில் கெண்டை வகை மீன்கள் 100 நாட்களைத் தாண்டும்பொழுது முக்கால் முதல் ஒரு கிலோ வரை எடைகூடும்.
முயல், பன்றி: முயல் பண்ணை வைத்திருப் பவர்களும் அசோலாவைப் பயன்படுத்தலாம். இதனால் பசுந்தீவன பிரச்னை தீரும். ஒரு முயலுக்கு 75-100 கிராம் வரை தரலாம். இதனால் அதிக ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு உதவியாய் இருக்கும். பன்றிகளுக்கு தரும்பொழுது அதிக எடை தரக்கூடியதாக இருக்கும். அதிக லாபம் பெற முடியும்.
மாடு, ஆடு, கோழி: மாடுகளுக்கு அசோலா தினமும் ஒன்றரை முதல் இரண்டு கிலோ வரை கொடுக்கலாம். அதனால் அதிகப்படியான பால் கிடைக்கும். மாடுகள் அதிகம் ஆரோக்கியமாக இருக்கும். தவிடு மற்றும் வைக்கோலைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக 40 சதவீதம் அசோலா பயன்படுத்தலாம். இதனால் உற்பத்தி செலவு குறைவு. பொருட்செலவு கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக லாபம் கிடைக்கும். செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பவர்கள் அசோலாவைப் பயன்படுத்து வதன்மூலம் அதிகப்படியான வளர்ச்சி மற்றும் அதிக எடை கிடைக்கும். கோழிகளுக்கு கொடுக்கும்போது முட்டை அதிக எடை கிடைக்கக்கூடும்.
மனிதர்களுக்கு: மனித வாழ்வின் மாற்றத்தை தரப்போகும் அசோலா கால்நடைகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் இதை ஒரு வகை கீரை எனக்கூறலாம். (பெரணி) மேலும் வைரஸ் காய்ச்சல்களை பரப்பும் கொசுக்களை அழிக்கும். இதை வீடுகளில் கூட சிறிய அளவில் வளர்க்கலாம்.
வளர்க்கும் முறை: 2 மீட்டர் அகலம், 4 மீட்டர் நீளம் கொண்ட சில்பாலிதீன் கவர். அதை ஒரு அரை அடி உயரம் கொண்ட பாத்திபோல் அமைத்து அதில் சலித்த செம்மண் ஒரு இஞ்ச் அளவிற்கு சம அளவில் பரப்ப வேண்டும். மேலும் 3 இஞ்ச் அளவிற்கு நீர் நிரப்பி அதில் 10 கிலோ பசுஞ்சாணம் நன்கு கரைத்து விடவேண்டும். பிறகு அசோலா விதைகளை அதில் தூவ வேண்டும். இது 6-7 நாட்களில் அந்த பாத்தி முழுவதுமாக வளர்ந்துவிடும். நமது தேவைக்கேற்ப பாத்திகள் அமைக்கலாம்.

நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் SANKAR 9952831890

02/12/2015

நாட்டு கோழி வளர்ப்பு ...!!!
=========================

நாட்டுகோழி பண்ணை அமைக்கும் நண்பர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்.இன்றைய நிலையில் ஆர்கானிக்,ஆர்கானிக் என்று மக்கள் இயற்கை உணவு முறைகளை நாடி செல்லும் நிலையில், இயற்கையாக கிடைக்கும் நாட்டு கோழிகளுக்கு இனி வரும் காலங்களில் நல்ல கிராக்கி உண்டு என்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை பெருகி வரும் நாட்டு கோழி பண்ணைகள் மூலமும் நாட்டு கோழிகளின் விலை அதிகரிப்பின் மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம் ( பிராய்லர் கோழிகள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்த உண்மைகள் ,அதன் மிக பெரிய வியாபார சந்தை கருதி மூடி மறைக்கப்பட்டு வருவது வேறு விஷயம்.)

பண்ணை அமைப்பு முறை
-----------------------------------------------

நாட்டு கோழிகள் இயல்பாகவே மிகவும் பலமானவை மழை,காற்று,அதிக வெயில் போன்றவற்றை எளிதாக தாங்கும் குணம் உள்ளவை எனவே திறந்த வெளியில் கம்பி வேலி அமைத்து எளிதாக வளர்க்கலாம்,இதற்கு "டயமன்ட் கிரில்" என்ற மிக சிறியஓட்டைகள் உள்ள வேலிகள் அமைப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் வெளியே செல்வதை தடுக்க முடியும். நாட்டு கோழி தேடி பாம்புகள் வருவது வாடிக்கை. அதனால், வேலியின் கிழே முழுவது வலை அடித்து விடுவதன் மூலம் பாம்புகளை நாம் தடுக்க முடியும்.பொதுவாக ஒரு ஏக்கருக்கு 2000 கோழிகள் வரை எளிதாக வளர்க்க முடியும், இதற்கு கொட்டகை என்று பெரிதாக ஒன்றும் தேவை இல்லை,மழை,வெயில் போன்றவற்றில் இருந்து ஒதுங்க சிறிய செலவிலான கூரை போன்ற கொட்டகை போதுமானது.

கோழி தீவனம்
------------------------------
கோழிகளுக்கு உணவாக பச்சை கீரைவகைகள், அசோலா,கினியா புல்,கோ-4,குதிரை மசால் ,காய்கள் மற்றும் அரிசி போன்றவகைகள் கொடுக்கலாம்.பிறகு இது இயற்கையாக சுற்றி திரிவதால் ,காட்டில் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.

நோய் தடுப்பு
-----------------------
தினமும் அனைத்து கோழிகளையும் நன்றாக கவனிக்க வேண்டும்.ஏதாவது ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் அது வேகமாக அனைத்து கோழிகளுக்கும் பரவி விடும் எனவே ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் உடனடியாக கண்டு பிடித்து மருந்து கொடுத்து விடுவது அவசியம்.

விற்பனை
-------------------
குஞ்சுகள் வளர்ந்த 3 மற்றும் 4 மாதங்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம்,இயற்கையாக வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள்.மற்றும் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்காமல் பக்கத்துக்கு நகர் புறங்களில் உள்ள அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் .

நன்றி: shree amman poultry farm 9952831890

12/11/2015

குளிர்கால பராமரிப்பு
துளசி+கருப்பட்டி வெல்லம் + மஞ்சள்தூள் கலந்து குடிநீரில் கொடுக்கவும் - பணி மற்றும் மழை காலங்களில் பண்ணையை இரவில் படுதாவால் மூடி வைக்கவும் - குடிநீர் தொட்டியை பனி இறங்காமல் மூடி வைக்கவும்

நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் SANKAR 9952831890

முட்டையை எப்படி சாப்பிட்டால் நன்மைகள் உண்டாகும்.? - மஞ்சள் கரு வில் உள்ள சத்துக்கள் என்ன.?தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் ...
29/10/2015

முட்டையை எப்படி சாப்பிட்டால் நன்மைகள் உண்டாகும்.? - மஞ்சள் கரு வில் உள்ள சத்துக்கள் என்ன.?
தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது.
ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது.
முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன.
மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 போன்ற சத்துகள் உள்ளது.
முட்டையில் இயற்கையாகவே வைட்டமின், 'பி12' மற்றும் ரைபோபிளமின் போன்ற நினைவாற்றலை மேம்படுத்தும் விட்டமின்கள் உள்ளன.
இந்தச்சத்துகள், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலுாட்டும் தாய்மார்களுக்கும் முக்கியத் தேவை.
முட்டையில் உள்ள குறிப்பிட்ட சில ஆன்டி ஆக்சிடென்ட், கண் புரை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு 5 சதவீதம் உள்ளது.எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின், 'டி' முட்டையில் உள்ளது.
அதேபோல் தோலுக்குத் தேவையான விட்டமின் 'ஈ' மற்றும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ஆதாரமான இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் துத்தநாகம் போன்றவையும் முட்டையில் உள்ளன.
செல் சுவர்களை உருவாக்கும், மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் கோலின் என்ற நுண்ணுாட்டச் சத்தும் முட்டையில் உள்ளது.
மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து மட்டும் 185 மில்லி கிராம் உள்ளது. இளம் வயதினர் தினமும், 300 கிராம் கொழுப்பு சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இதய நோய், சர்க்கரை நோய் பிரச்னை, அதிக அளவு கெட்ட கொழுப்பு உடலில் இருந்தால், முட்டையின் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும்.
வயதானவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களும் முட்டையை தவிர்க்கலாம்.
கொழுப்பை தவிர்க்க விரும்புபவர்கள் காலை உணவில் இரு முட்டைகளின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.
முட்டையில் உள்ள சத்துக்கள்
உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) இதில் உண்டு. மேலும், தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு.
எத்தனை முட்டை சாப்பிடலாம்
1. பிட்னஸ் பயிற்சியை மேற்கொள்ளும் ஆண்கள் அதற்கேற்ற கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் டஜன் கணக்கில் முட்டை சாப்பிட்டாலும் அவர்களுக்கு எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது.
தசைகள் செழுமையாகத் தெரிவதற்கு புரதம் அவசியம். முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாகவே பிட்னஸ் பயிற்சியை மேற்கொள்பவர்கள் அடுக்கடுக்காக முட்டைகளை உடைத்துக் குடிக்கிறார்கள்.
2. கணனி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டாலே போதும். உடல் உழைப்பு அதிகமுள்ள வேலைகளில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம். பொதுவாக முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 வரை சாப்பிடலாம்.
மஞ்சள் கரு சாப்பிடுவதாக இருந்தால், தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும், இரவு நேரத்தில் முட்டை சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், தூங்கப் போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன் சாப்பிட வேண்டும்.
3. மஞ்சள் கருவையும் சேர்த்து முட்டைகளை அதிகமாக சாப்பிடுபவர்களின் உடலில் கொழுப்புச் சத்து அளவு அதிகமாகி, இதய நோய்கள் வரக்கூடும். தேவையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு அதன் பின்னர் முட்டை சாப்பிடுவது உடல் வலிமையை கூட்டும்.
4. முட்டையை அதிக நேரம் சமைக்கக் கூடாது. 10-15 நிமிடங்கள் கடாயில் போட்டு வறுத்தால் ஒருவித வாசனை வரும். முட்டை அதன் இயற்கைத் தன்மையை இழந்துவிடும். தண்ணீரில் போட்டு அவித்துச் சாப்பிடும் முட்டையே ஆரோக்கியத்துக்கு உகந்தது.
5. காய்கறிகளை நறுக்கிப்போட்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லெட் தயாரித்தும் சாப்பிடலாம். முட்டையில் இருக்கும் புரதங்களை உடல் எளிதாக ஏற்றுக்கொள்ளும், ஆகவே முட்டை சாப்பிடுங்கள்.

நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

நாட்டு கோழி நாட்டுகோழி முட்டை & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் SANKAR -9952831890

Address

Newstreet
Tiruchendur
628206

Telephone

9952831890

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shreeammanpoultryfarm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category