27/09/2014
#கண்டிப்பாக_பகிரவும்:- சேவல் சண்டை:
===============
(குறிப்பு: இவ் அறிய செய்தித்தொகுப்பு நம் பெரம்பலூர் சேவல் ஆர்வலர் ஒருவரால் நமக்கு தரப்பட்டது. இதன்மூலம் சேவல் சண்டையினை பற்றி பல அறிய விசயங்களை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. இது வேறு வலைதளங்களில் எங்கும் கிடைக்காது. முதல் முறையாக பதிவு செய்கின்றோம். நண்பர்களே இதனை அதிகமாக பகிர்த்து உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் படிக்க செய்யுங்கள்.)))
தமிழக மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. சேவல் சண்டையானது, சேவல் கட்டு, கோச்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை, என வெவ்வேறு இடத்துக்கு ஏற்ப வெவ்வேறு விதிகளுக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களில் நடத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது. ஜல்லிக்கட்டு காளைகளை எப்படி பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பு இருந்து தயார் படுத்துகிறார்களோ அதே போல சண்டை சேவல்களையும் தயார்படுத்துகின்றனர்.
பொதுவாகவே சேவல்களுக்கு சக சேவல்களை அடக்கி ஆளவேண்டும் என்ற மனநிலை உண்டு. ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட சேவல்களாக இருந்தாலும் கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற ஈகோ இருக்கும்.
அதனால் அவற்றை சண்டையிட செய்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை. சண்டை பயிற்சியோடு சில கடுமையான உடற்பயிற்சிகளும் சேவலுக்கு கொடுக்கப்படுகிறது. இதே போல இரையும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வழக்கமான உணவை விட உடலை வலுப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம்,பிஸ்தா, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி போன்றவை கொடுக்கப்படும். சண்டைக்கு நன்கு தயாராகிய சேவல்களை பொங்கல் பண்டிகைக்கு சில தினங்களுக்கு முன்பே ரகசியமாக பண்ணை தோட்டங்களில் வைத்து ஒத்திகை நடத்துவார்கள். அப்போதுதான், காணும் பொங்கலுக்கு எந்த இடத்தில் போட்டி நடத்துவது, எத்தனை சேவல்கள் பங்கேற்கும் என்பது போன்ற விபரங்கள் சேகரிக்கப்படும்.
சேவல் சண்டையில் இருவகை உண்டு
1. வெப்போர், வெத்தடி அல்லது வெற்றுகால் சேவல் சண்டை..
2. கத்திகால், கத்தி கட்டு சேவல் சண்டை
இவ் இரண்டு வகை சண்டைக்கும் இரண்டு வெவ்வேறு வகை சேவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ் இரண்டு வகை சண்டை சேவல்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒரு சாமானியனுக்கு தெரியாது ஆனால் சேவல் சண்டை காரர்களுக்கு எளிதாகவே தெரிந்துவிடும். (படத்தை பார்க்கவும்)
வெற்றுகால் சேவல் சண்டை:
-------------------------------------------------
சென்னை, தஞ்சாவூர், பெரம்பலூர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, பாண்டிச்சேரி மற்றும்
சிவகங்கை மாவட்டங்களில் வெற்று கால் அல்லது வெப்போர் சேவல் சண்டை நிகழ்த்தப்படுகிறது. போனவருடம் வெளியான "ஆடுகளம்" படத்தில் வந்த சேவல்கள் அணைத்து வெப்போர் சேவல்கள் ஆகும். அந்தபடத்தை பார்த்தாலே பல விஷயங்கள் நமக்கு புரியும்.
வெப்போர் சேவல்கள் மிகவும் கட்டு மஸ்தான உடல்வாகுடன் இருக்கும். சில சேவல்கள் இரும்பை போன்ற கழுத்துடன் இருக்கும். வெப்போர் சேவல்களை அசில்(Asil அல்லது Aseel) என்று அலைகின்றனர் காரணம் "அசில்" என்ற சொல் "அசல்" என்ற சொல்லின் திரிபே ஆகும். அதற்க்கு "சுத்தமான" அல்லது "கலப்படம் இல்லாத" என்று அர்த்தம். இதில் சுத்தமான வகையாக இருந்தால் மட்டும்தான் சண்டை சரியாக செய்யும். வெப்போர் சேவல்களை பொருத்தமட்டில் வேகம் மட்டும் அல்ல விவேகமும் முக்கியம். பெரும்பாலும் இச் சேவல்கள் பிறக்கும் போதே சண்டைபோடும் குணாதிசயத்துடன் பிறக்கின்றன. இவற்றிற்கு சண்டை பயற்சியளிக்கும்போது அந்த குணம் மேலும் மெருகெற்றப்படுகின்றது. எந்த எதிரியை எப்படி அடிக்கவேண்டும் என்று அவற்றிற்கு தெரியும். இவ்வகை சேவல்களுக்கு உடம்பே ஆயுதம். காலில் உள்ள நெகங்கல் மட்டும் அல்லது கட்டை விரலுக்கு மேல் மாட்டு கொம்பினை ஒத்த நேகமும் வளர்கிறது. இதனை "முள்" என்று கூறுகின்றனர். இந்த "முள்" அம்பின் முனைபோன்று கூர்ப்பாக்க படுகின்றது. சிறந்த சேவல்கள் அந்த முல்லை பயன்படுத்தி எதிரி சேவலை ஒரே அடியில் கூட வீழ்த்தி விட முடியும். அடி தலையில் பட்டால் மூளை சிதறிவிடும். கழுத்தில் உள்ள எலும்புகள் கூட உடைத்து சேவல்கள் இறப்பது உண்டு.
வெப்போர் சேவல்கள் கழுத்து மற்றும் தலையினை மட்டுமே பெரும்பாலும் தாக்கும். மற்ற இடங்களில் அடித்தால் எதிரியை வெல்லவோ கொல்லவோ முடியாது.
சண்டைக்கு பலமாதங்களுக்கு முன்னரே சேவல்கள் தயார்செய்யப்படும். பிறந்ததில இருந்தே பேணி பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன. 6 மாதத்தில் இருந்தே சண்டை ஒத்திகை பார்க்கப்படும். . இதை "டப்னி" என்று கூறுவர். இதில் நல்ல சேவல்களை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை விற்காமல் கொன்று விடுகின்றனர்.