17/03/2022
காணொளியில் வரும் நாய் #சிப்பிப்பாறை நாய் வகை மாதிரி இருக்கிறது என்று நண்பர் ஒருவர் சந்தேகம் எழுப்பினார்..
அதை தீர்க்க வேண்டியது எங்கள் கடமை..
தமிழன் நிலப்பரப்பு நம்மை அடிமை படுத்த வந்த அந்நியர்களால் சுருங்கியது..
அதாவது #தெலுங்கு மொழி பேசும் #விஜயநகர அரசு ஏற்கனவே #மாலிக்கபூரிடம் அடிமையாக இருந்த நம்மை மீண்டும் வந்து அடிமை படுத்தினர்.. அப்படி அடிமை படுத்தியவர்கள் தங்கள் குடியேற்றங்களை பரவலாக்கினார் தமிழன் நிலப்பரப்பில்..
அவர்களிடம் இருந்து தமிழன் கலாச்சாரம், வாழ்வியல், விலங்குகள் ஆகியவற்றை காப்பாற்றி கடைசியாக பாதுகாத்த நிலப்பரப்பு #சேதுசீமை..
அந்த நிலப்பரப்பில் நாயக்கர்களின் குடியேற்றம் காண முடியாது..
இது வெறும் நாய்கள் பற்றிய தகவல் கிடையாது.. நமது வரலாறு.. பூர்வீகம்..
அவர்களுடன் நாம் போராடி கொண்டிருக்கும் போதே ஆங்கிலேயன் வந்து அனைவரையும் அடிமை ஆக்கினான்..
நாயக்கர் குடியேற்றம் அதிகம் இருந்த பகுதிகளிலே அவர்கள் தங்களுடன் கொண்டு வந்த விலங்குகளும் இருந்தன..
அவர்கள் பாளையங்கள் திருநெல்வேலி, பாஞ்சாலங்குறிச்சி, விளாத்திகுளம், கோவில்பட்டி, விருதுநகர் போன்ற பகுதிகளில் அதிகம்..
ஆனால் #சேதுசீமை என்று அழைக்க படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அவர்கள் குடியேற்றம் கிடையாது..
அதனால் தான் சேது மண்ணில் இன்றும்
#தென்பாண்டி காளை
#குட்டை காளை
#பொட்டு கிடாய்
#அசீல் சேவல்
#கழுத்தறுத்தான் சேவல்
#கொடி ஆடு
#அணங்கு
#கோம்ப
#கிடை நாய்
#குக்கல்
போன்ற தமிழனின் பூர்வீகமான கலப்பு இல்லாத இனங்களை பார்க்க முடிகிறது..
ஆனால் ராமநாதபுரம் மண்ணில் இன்று உள்ள தலைமுறைகளின் அலட்சியத்தால்.. பண ஆசையால் இவை அனைத்தும் அழிவை நோக்கி பயணிக்கிறது..
நம் அடையாளத்தை அழித்து விட்டு இன்று பணம் கொடுத்து திருநெல்வேலி தூத்துக்குடி பகுதியில் இருந்து ராமநாதபுரம் இளைஞர்கள் சிப்பிப்பாறை நாய்களை இந்த கடைசி 5 வருடமாக தான் வாங்கி வருகின்றனர்..
என்றுமே இக்கரைக்கு அக்கரை பச்சை தானே..!
#கிடைநாய் :
இது கல் உடம்பு நாய்கள் என்றும் அழைக்க படுகிறது.. நல்ல உயரம், நீளம் இருக்கும்.. ஆடு, மாடுகள் மேய்க்க பயன்படுத்துகின்றனர்.. இவை நாள் ஒன்றுக்கு அதிக தூரம் ஆடு மாடுகளுடன் பயணிப்பதால் நடந்து நடந்து உடல் ஒரு கட்டு மஸ்தக இருக்கும்.. மேய்ச்சலின் நடுவே காட்டில் முயல்களை கண்டால் உணவாக கொண்டுவிடும்.. இந்த நாய்களின் தலை அமைப்பு சிரியதே தவிர சிப்பிப்பாறை நாயை போல ஊசியாக இருக்காது..சிப்பிப்பாறை நாய்களில் வால் முடிச்சு விழுந்திருக்கும்.. கிடை நாய்களில் வால் புலி வால் என்று அழைக்க படும் அமைப்பில் இருக்கும்.. இனி வரும் நாளில் இது போன்ற நாய்களை live வீடியோ தருகிறேன்..
#கம்பளத்துநாயக்கர்கள் தங்கள் நாய்களை யாருக்கும் எளிதாக கொடுக்க மாட்டார்கள்.. நான் நேரில் பார்த்த அனுபவம் உண்டு.. மேலும் ஆண்டு ஒரு முறை அவர்கள் குல தெய்வம் ஜக்கம்மா வை வணங்கி வேட்டைக்கு செல்லும் பாரம்பரிய வழக்கம் உண்டு அவர்களுக்கு.. அவர்களை நான் தலை வணங்குவேன்.. அவர்கள் இனத்தை சீதனமாக கொடுத்து கூட அதை பாதுகாத்தனர்.. ஆனால் நாம்..?
#தமிழக அரசு நடத்திய ஆராய்ச்சி முடிவில் சிப்பிப்பாறை நாய்களை பற்றி குறிப்பிடுகையில் ராமநாதபுரம் மாவட்ட பெயரே வராது.. அந்த பதிவை ஏற்கனவே நமது பக்கத்தில் பதிவிட்டுள்ளேன்.. பார்த்து கொள்ளலாம்..
நான் இந்த நாய் பெரியது.. அந்த நாய் பெரியது என்று பேச வர வில்லை..
என் நாய் (தமிழன் நாய்) எதுவென்று எனக்கு தெரியும்.. அதை பாதுகாக்க விருப்பம் உள்ளவர்கள் என்னை பின் தொடரலாம்..
#சிப்பிப்பாறை ஒரு இனமே இல்லை என்று என்றுமே நான் கூறியது இல்லை.. ஆனால் #கன்னி என்பது நிறமே அன்றி இனம் அல்ல..
என் தாத்தா எனக்கு கற்ப்பித்ததை நான் என் மகனுக்கு கற்று தருவது என் கடமை..
முடிந்தால் பின் தொடரவும்.. வெறுத்தால் விட்டு விலகவும்..