21/02/2018
வெள்ளை கழிச்சல் நோய்
அறிகுறிகள்:
* கோழிகள் எச்சம் வொள்ளை நிறத்தில் அதிக துர்நாற்றதுடன் இருக்கும்.
* கோழிகள் குன்னியும் சுருசுருப்பின்றியும் உறங்கிய படி இருக்கும்.
* கோழிகள் இறகுகள் சிலிர்த்து தலை பகுதி உடலுடன் சேர்த்தே இருக்கும்.
*கோழிகள் இறை தண்ணீர் எடுக்காமல் இருக்கும்.
இயற்கை மருத்துவம்:
ஒரு கோழிக்கு கொடுக்கும் மருந்து
*கீழாநெல்லி செடி ஒரு முழுச் செடி ( வேர் தண்டு இலை ).
இது கிடைக்காத பட்சத்தில் நாட்டு மருந்து கடைகளில் இதன் பொடி கிடைக்கும் 50 கிராம். ( மிக முக்கியமான )
*சின்ன வெங்காயம் 4 அல்லது 5.
*பூண்டு 2 அல்லது 3.
* சீரகம் 20 அல்லது 25 கிராம்.
* மிளகு 2.
* கட்டி மஞ்சள் 1 துண்டு தூளாக இருந்தால் 5 அல்லது 10 கிராம்.
* இதை ஒன்றாக சேர்த்து அரைத்து அதை நல்லெண்ணெய் அல்லது நெய் அல்லது வேப்பெண்ணெய் 3 செட்டு விட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பெரிய கோழிகளுக்கு 4 சிறிய குஞ்சுகளுக்கு 2 அதன் வாயில் 3 அல்லது 5 நாட்கள் காலையும் மாலையும் போட்டு விடவும்.
* இது மாதம் இருமுறை கொடுத்தால் மீண்டும் எந்த கோழிகளும் வராமல் தடுக்கலாம்.
ஆங்கில மருத்துவம்:
* இதற்கு ஆங்கில மருத்துவ முறையில் பிறந்த குஞ்சுகளில் இருந்தே தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. இதை படம் 1 மற்றும் படம் 2 ல் உள்ளது போல அந்த அந்த நாட்களுக்கு அந்த மருந்துகள் கொடுப்பதால் வராமல் தடுக்க முடியும்.
* வெள்ளை கழிச்சல் நோய் தாக்கிய கோழிகளுக்கு லிக்ஸன் பொடி 1 லிட்டர் வெண்ணீறில் 50 கிராம் கலந்து வைக்கவும். இது வாரம் ஒருநாள் கொடுத்தால் வராமல் தடுக்கும்.
* ஓஎஃப்எம் (ofm tonic) மருந்தினுல் பாரசிடம்மால் டோலோ 650 ( paracitamal dolo 650) மாத்திரை அல்லது நாம் காய்ச்சலுக்கு பயன்படுத்தும் மாத்திரை 1, எலக்ரால் போடி (electral powder ) 1, மெரிகுயின் 350 மாத்திரை 2 அல்லது என்ரோஃபின் மற்றும் என்றோஃபிலக்ஸின் மருந்து 2 ml பொடியாக்கி வொண்ணீறில் சேர்த்து கலந்து நன்கு குலுக்கி பின் 1 ml ஒரு நாளைக்கு இரண்டு வேலை 3 அல்லது 5 நாட்கள் கொடுக்கலாம்.
* இந்த மருந்து எப்போது கொடுத்தாலும் கொடுத்த பின் கண்டிப்பாக லிவர் டானிக் ( brotone ..etc) 1 ml கொடுக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கும் சந்தேகங்களுக்கும் கமண்ட் பன்னுங்க அல்லது தனிப்பதிவில் கேளுங்கள்.
நன்றி, இஷ்மத்