S.V.V Organic Integrated Farming System

S.V.V Organic Integrated Farming System S.V.V Organic integrated farming system

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
23/01/2025

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

25/07/2024
11/04/2024
கம்பி வலையில் விளையும் கேரட்! - வீட்டுத்தோட்டத்தில் இது புதுசு!கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் ஒரு மலைப்பிரதேசம். சுற்றுலா...
14/09/2020

கம்பி வலையில் விளையும் கேரட்! - வீட்டுத்தோட்டத்தில் இது புதுசு!

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் ஒரு மலைப்பிரதேசம். சுற்றுலாவுக்குப் பெயர்பெற்ற வயநாட்டில் விவசாயம்தான் பிரதானம். அங்கு புல்பள்ளி என்ற பகுதியில் இயற்கை வேளாண்மை செய்து வரும் வர்க்கீஸ் என்ற விவசாயி, வித்தியாசமான முறையில் கேரட் சாகுபடி செய்து வருகிறார். நேரடியாக நிலத்தில் வளர்க்காமல், கம்பி வலையில் மண் நிரப்பி, அதில் கேரட் வளர்த்து வருகிறார்.

அவரது தொழில்நுட்பத்தைத் தெரிந்து கொள்வதற்காக வர்க்கீஸிடம் பேசினோம். “நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றரை ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறேன். குறுமிளகு, ஏலக்காய், கிராம்பு, பழவகைகளைச் சாகுபடி செய்து வருகிறேன். முதலில், மண்ணில் நேரடியாகத்தான் கேரட்டை விதைத்தேன். அது மழை பெய்து அது சேதமடைந்துவிட்டது. மேலும், வெப்பம் அதிகரிக்கும்போது மண் இறுக்கமாவதும் ஒரு பிரச்னையாக இருந்தது. அதனால்தான், இந்த யோசனையைச் செயல்படுத்தினேன். இதற்கு அதிக இடமும் தேவையில்லை’’ என்றவர் அவர் செயல்படுத்தும் முறையைச் சொல்லத் தொடங்கினார்.

‘‘வெல்டு மெஷ் நெட் (Welded Mesh Net) கம்பி வலை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை 60 செ.மீ-க்கு வெட்டிக்கொள்ள வேண்டும். அந்த நெட்டில் பெயின்ட் அடித்துக்கொண்டால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு உழைக்கும். பெயின்ட் அடிக்காவிட்டால் நெட் துருப் பிடித்துப் பயன்படுத்த முடியாமல் போய்விடும். பிறகு அந்த மெஷ் நெட்டுக்குள், ஒரு க்ரீன் நெட்டை (பசுமை வலை) வைத்து வட்டமாக்கிக் கொள்ள வேண்டும். நெட்டை ஒரு கயிற்றால் கட்டினால் போதும். பிறகு, அந்த நெட்டின் உயரத்துக்குத் தகுந்தாற்போல வட்டத்தின் நடுவில் ஒரு ட்ரிப் பைப்பை (சொட்டு நீர்க் குழாய்) உள்ளே விட வேண்டும். பிறகு, மண்ணைப் போட்டு நெட்டை நிரப்ப வேண்டும். பிறகு, நெட்டின் வெளிப்பகுதியில் 7 அடி இடைவெளிவிட்டு, பிளேடால் வெட்டி, குச்சியின் உதவியுடன் விதைகளை உள்ளே நடவு செய்ய வேண்டும். நெட்டின் நீளத்துக்கு மூன்று பகுதிகளில் தலா 7 இடங்கள் வீதம் 21 விதைகள் நடலாம். மேலும், நெட்டின் மேல் பகுதியில் 4 விதைகள் என மொத்தம் 25 விதை களை நடவு செய்யலாம்.

முடிந்தவரை மண்ணை இறுக்கமாகப் போடாமல், சற்று பொலபொலப்பாகப் போட வேண்டும். பக்கெட்டில் தண்ணீர் ஊற்றினால் அதன் வேகத்தால் விதைகளுக்குப் பிரச்னை ஏற்படும். அதனால், நாம் ஏற்கெனவே உள்ளே வைத்துள்ள சொட்டுநீர்க் குழாய் மூலமாகத் தண்ணீர் கொடுக்கலாம் அல்லது ஸ்பிரேயர் கொண்டும் தெளிக்கலாம். ஆனால், சொட்டுநீர் பைப் இருந்தால் வேலை எளிது. மழை வரும்போது, ஏதாவது ஷீட் போன்ற மூடிகளை வைத்து நீர் உள்ளே செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை, இலைப் பொடிகளை உரமாகப் பயன்படுத்தலாம். ஆட்டுப் புழுக்கை நல்ல பயனைத் தரும். 90 நாள்களில் கேரட்டை அறுவடை செய்துவிடலாம். சராசரியாக ஒரு நெட்டில் 4 முதல் 5 கிலோ கேரட் கிடைக்கிறது. நான் மொத்தம் 45 நெட்களில் கேரட் சாகுபடி செய்து வருகிறேன். இந்த அமைப்புக்குச் சுமார் ரூ.20,000 செலவானது. இந்த முறையில் இரண்டாண்டுகளாகக் கேரட் சாகுபடி செய்து வருகிறேன்’’ என்றவர் நிறைவாக,

‘‘ஆண்டுக்கு 4 முறை வீதம் இரண்டாண்டுகளில் 8 முறை கேரட் சாகுபடி செய்துள்ளேன். இரண்டு முறையிலும் சாகுபடிக்கு 90 நாள் களாகும். மண்ணில் 1 கேரட் விளைந்த இடத்தில், இங்கு 50 கேரட்டுகள் கிடைக்கின்றன. ஒரு கிலோ கேரட் ரூ.40-லிருந்து 50-க்கு விற்கிறேன். இது எல்லா இடங்களிலும் விளையும். மண்ணில் சாகுபடி செய்யும் அளவுக்கு இதில் மெனக்கெடத் தேவையில்லை. குறைந்த அளவு தண்ணீர் போதும். விதை பை முறைபோலத்தான் இந்த நெட்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி அமைத்தேனோ? இப்போதும் அப்படிதான் இருக்கிறது. நம் வீடுகளில் ரோஜா செடி வளர்ப்பது போலத்தான், இதைப் பராமரிப்பதும். மொட்டை மாடி, வீட்டின் இரண்டு புறங்களில் கூட இதை வைக்கலாம். விவசாயிகளுக்கும் இது நல்ல லாபத்தைக் கொடுக்கும்” என்றார்.

தொடர்புக்கு, வர்க்கீஸ், செல்போன்: 097443 67439

மாடித் தோட்டமும் கொரோனாவும்கொரோனா தொற்று பரவிக் கொண்டே இருக்கும் இன்றைய நிலையில்,  அத்தியாவசிய உணவுப் பொருட்களான காய்கறி...
12/09/2020

மாடித் தோட்டமும் கொரோனாவும்

கொரோனா தொற்று பரவிக் கொண்டே இருக்கும் இன்றைய நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களான காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் பழங்களை வாங்குவதற்காக அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே செல்கிறோம். இந்த கொரோனாவின் அச்சத்தைத் தவிர்க்க, சத்தான தரம் வாய்ந்த உணவுப் பொருட்களை வீட்டிலே விளைவிப்பதே சிறந்தது மற்றும் பாதுகாப்பானது ஆகும். கிராமங்களில் வயல்வெளி, வீட்டுத் தோட்டம் போன்ற வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நகரங்களிலோ இட நெருக்கடியால் மாடித் தோட்டமே சிறந்த முறையாகும்.

மாடித் தோட்டப் பயிர்களை குறைந்த அளவில் எந்த பருவத்திலும் வளர்க்கலாம். எனினும் காய்கறிகளுக்கு ஜூன் – ஜூலை மற்றும் டிசம்பர் – ஜனவரி பருவங்களே சிறந்தவை. கீரைகளை ஆண்டு முழுவதுவும் குளிர் பருவ காய்கறிகளான கேரட், பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றை அக்டோபர் – ஜனவரி மாதங்களிலும் வளர்க்கலாம். பயிருக்கு ஏற்ற வளர்ப்புத் தொட்டிகளை அல்லது பைகளை தேர்வு செய்ய வேண்டும். பெரும்பாலும் காய்கறிகளை 10 – 20 லிட்டர் பைகளிலும் கொடி வகை காய்கறிகளை 30 – 40 லிட்டர் பைகளிலும் மற்றும் மர வகைகளை 100 – 200 லிட்டர் பைகளிலும் வளர்க்கவும். பைகளில் வளர் ஊடகமாக 1:1 விகித நிலையில் மண்புழு உரம் மற்றும் தென்னை நார்க் கழிவை பயன்படுத்துவதே சிறந்தது. இது எடை குறைவு மற்றும் நீண்ட நாட்கள் ஈரத்தை தாங்கும் தன்மை உடையது. அதனுடன் உயிரி இடுபொருட்களைச் சேர்த்துக் கொள்வதால் வளர் ஊடகம் மூலம் பரவும் நோய்கள் தடுக்கப் படுகிறது. பைகள் அல்லது வளர்ப்புத் தொட்டிகளிள் வடிகால் துளைகள் இட்டு அடியில் ஒரு அடுக்கு மணலும் அதன் மேல் வளர் ஊடகத்தை கொண்டு நிரப்பிக் கொள்ளவும்.

விதைப்பில் தக்காளி, மிளகாய், கத்தரி, காலிஃப்ளவர், முட்டைக் கோஸ், கேப்சிகம் போன்றவை நாற்று நடவுப் பயிர்கள், மற்ற காய்கறிகள் பெரும்பாலும் நேரடி விதைப்பு பயிர்கள். நாற்று நடவுப் பயிர்களுக்கு குழித்தட்டு நாற்றங்கால் கொண்டு நாற்று உற்பத்தி செய்து 25-30 நாள் நாற்றை வளர்ப்புப் பைக்கு மாற்றவும். நேரடி விதைப்பு பயிர் விதைகளை பைகளில் 1-2 அங்குல ஆழத்தில் போட்டு வளர் ஊடகம் கொண்டு மூடவும். பின்னர் பூவாளியைப் பயன்படுத்தி நீர்ப்பாசனம் கொடுக்கவும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக் கூடிய துளசி, தூதுவளை, கற்பூரவள்ளி, இன்சுலின் செடி, சோற்றுக் காற்றாலை போன்ற மருத்துவச் செடிகளை வீட்டில் வளர்க்கலாம்

நோய்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்த நீரில் லிட்டருக்கு 3 கிராம் ட்ரைக்கோடெர்மா மற்றும் சூடோமோனாஸ் கலந்து தெளிப்பதன் மூலம் வேர் அழுகல் போன்ற பல நோய்களைத் தவிர்க்கலாம். பூச்சிகளை விரட்ட வாரம் ஒரு முறை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்கவும். இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் முறையே 25 கிராம் எடுத்து அரைத்து அந்த சாற்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதால் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப் படுத்தலாம். தாவரங்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் புழுக்களை எளிதில் சேகரித்து அளித்து விடலாம். வீட்டுப் பயன்பாட்டிற்கு என்பதால் பெரும்பாலும் இரசாயண உரம் மற்றும் மருந்துகளை தவிர்த்து இயற்கை முறையையே பின்பற்றவும். மாடித் தோட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களைத் தனிமைப் படுத்துவதை போலவே பூச்சி மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட பைகளைத் தனிமைப் படுத்தி மற்றப் பயிர்களுக்கு பரவாமல் பாதுகாக்காலம். இவ்வாறு தனிமைப் படுத்துவதன் மூலம் கொரோனாவில் மட்டுமின்றி மாடித் தோட்டத்திலும் நோய் பரவுவதைத் தடுத்து வெற்றி காணுவதோடு நம் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை நாமே உற்பத்தி செய்து தன் நிறைவு அடைவதோடு வீட்டுச் செலவையும் வெகுவாக குறைக்கலாம். மேலும் வீட்டில் இருக்கும் நேரத்தை பயனுள்ள வகையில் பொழுது போக்குவதோடு ம‌ட்டும‌ல்லாம‌ல் உடல் ஆரோக்கியம் மற்றும் மன மகிழ்ச்சியையும் பெறலாம்.

ஆனைக்கொம்பன் என்னும் அரக்கன்கடந்த வருடம் பெய்த தொடர்ச்சியான மழையினாலும் காலநிலை மாற்றம் காரணமாக டெல்டா மாவட்டங்களான திரு...
10/09/2020

ஆனைக்கொம்பன் என்னும் அரக்கன்

கடந்த வருடம் பெய்த தொடர்ச்சியான மழையினாலும் காலநிலை மாற்றம் காரணமாக டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய இடங்களில் பயிரிடப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மிக பெரிய சவாலைச் சந்தித்து இருக்கின்றன. பெரும்பான்மையான மக்களின் (2.7மில்லியன்) நிலையான உணவுப் பயிராக நெல் விளங்குகிறது. நெற்பயிர்களைத் தாக்க கூடிய பூச்சிகளில் ஒன்றான ஆனைக்கொம்பன் ஈ பெரிய அளவில் தாக்குதல்களை எற்படுத்தி விவசாயிகளுக்கு மனவருத்ததுடன் மகசூல் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பூச்சியைப் பற்றி
ஆனைக்கொம்பன் ஈ, ஆசிய அரிசி பித்தப்பை ,பித்தப்பை குண்டுகள்,கால் மிட்ஜ் என வேறு சில பெயர்களைக் கொண்டுள்ளது.இதன் அறிவியல் பெயர் ஒர்சியோலியா ஒரைசே டிப்டெரா வரிசையில் ஓர் சிறிய குடும்பமான செசிடோமையிடேவைச் சேர்ந்தது.
இது ஏன் முக்கியமானது
இலங்கை மற்றும் சில பகுதிகளில் ஆனைக்கொம்பன் ஈ 30-40% மகசூல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்த இடத்தில் உற்பத்தியாகிறது
மேட்டு நிலப்பகுதிகள் மற்றும் ஆழமான நீரில் பயிரிடப்படும் நெற்பயிரில் இது பொதுவான பூச்சியாகும். மழைகால விவசாயம் போன்ற ஈரமான சூழல் அல்லது நீர்ப்பாசனம் செய்யப்பட்ட சூழலில் அதிகமாகக் காணப்படுகிறது. வறண்டக் காலங்களில் ஆனைக்கொம்பன்ஈ புழுக் கட்டத்தில் செயலற்ற நிலையில் இருக்கும் மழைக்கு பிறகு மொட்டுகள் வளர தொடங்கும் போது அவை மீண்டும் செயல்படத் துவங்கி விடும்.
அதற்குப் பிடித்த மாற்றுப்பயிர்கள்
இந்த ஈயானது நெற்பயிர்களுக்கு அடுத்துப் புல் வகைகளில் அதிகம் காணப்படும். நெற்பயிரில் தூர்கள் துளிர்விடுவதற்கு முன்பு வரப்பு ஓரங்களில் உள்ள புல்வகைகளில் இருக்கும். தூர்கள் வந்தவுடன் இடமாறி பயிரைத் தாக்க ஆரம்பித்து விடும்.

அடையாளம் காண்பது எப்படி
முதலில் பூச்சியின் தாக்கத்தினை உறுதிசெய்ய பூச்சிகள் வயலில் உள்ளதா என்று பார்க்க வேண்டும். இந்த ஈயானது நடவு செய்த 35 முதல் 53 நாட்களில் அதிகம் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. நடுக்குருத்து இலை வெள்ளித்தண்டு அல்லது வெங்காய இலை போன்று காணப்படும். இந்த அறிகுறியானது நாற்றங்கால் பருவத்தில் இருந்து பூக்கும் பருவம் வரை காணப்படும். பாதிக்கப்பட்டத் தூர்கள்/கிளைத்தண்டுகளின் அடிப்பகுதியில் குழாய் அல்லது உருண்டை போன்ற முடிச்சுகள் ஏற்படும். இதனால் நீண்ட வெள்ளி போன்ற இலைஉறைகள் உருவாகும் (1செமீ அகலம் மற்றும்10-30செமீ நீளம் உடையவை). பாதிக்கப்பட்ட தூர்களில் இலைகள் வளர்ச்சி பாதிக்கப்படும் மற்றும் தானியங்கள் உற்பத்தி முற்றிலும் தடைபடும். பயிர்களின் வளர்ச்சி குன்றும் இலைகள் உருமாற்றம் பெற்று சுருண்ட இலைகளைக் கொண்டிருக்கும்.

பூச்சியின் பருவ நிலைகள்
முட்டை:
இந்த ஈயானது நீளமான, உருளை வடிவத்தில், பளபளப்பான வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற முட்டைகளை இலைகளின் அடிப்பகுதியில் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ (26வரை) இடும் தன்மையுடையது. ஆனால் அவைப் பொரிக்கும் நேரத்தில் இரண்டு முதல் நான்கு நாட்களுக்கு பிறகு சாக்லேட் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

புழு:

புழு 1மி.மீ நீளமும் முன் பகுதியில் கூர்மையுடனும் காணப்படும். சிவப்பு நிறப் புழு இலையுறையின் அடிப்பகுதியில் ஊர்ந்து சென்று தண்டுக்கள் நுழைகின்றன. சுமார் பத்து முதல் பதிமூன்றுநாட்களுக்கு உணவு எடுத்துக் கொண்ட பிறகு ஒரு பித்தப்பையை உருவாக்குகிறது.

கூட்டுப்புழு:

கூட்டுப்புழு நான்கு முதல் ஏழு நாட்களுக்கு பிறகு அவற்றினுடைய அடிவயிற்றின் நுனியில் முதுகெழும்புகளைப் பயன்படுத்தி அதன் நுனிக்கு அருகிலுள்ள பித்தப்பையை துளைக்கும். இதன் வழியே முதிர் பூச்சிகள் வெளியே வருகின்றன.

முதிர்பூச்சி:

மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் கொசு போன்று சிறியதாக இருக்கும். ஆண்ஈக்கள் சாம்பல் நிறத்தில் இருக்கும். இலையின் மேல்உள்ள பனித்துளிகளை உட்கொள்ளும். முதிர்பூச்சு 3-4நாட்கள் வரை வாழ்ந்து 250-300முட்டைகள் வரை இடுகின்றன. வாழ்க்கை சுழற்ச்சி 15-23 நாட்களில் முடிகின்றன.
பொருளாதர வரம்பு நிலை: ஒரு வெள்ளித் தளிர் / சதுரமீட்டர் அல்லது 10% வெள்ளித் தளிர்கள்.

எவ்வாறு கட்டுப்படுத்தலாம்:

பூச்சி தாக்குதலுக்கு எதிர்த்து வளரக் கூடிய ரகங்களைத் தேர்வு செய்துப் பயிரடலாம். மழைக்காலங்களின் தொடக்கத்திற்கு முன்னரே பயிரிடவும். அறுவடை செய்த பின் நிலத்தை உடனடியாக உழவு செய்தல் வேண்டும். பூச்சி உண்ணக்கூடிய மாற்றுப்பயிர்களை நிலத்தினைச் சுற்றி அகற்றி விட வேண்டும். பருவகாலம் இல்லாத வேளைகளில் நிலத்தினை தரிசாக வைத்திருக்கவும்.

5-7நாட்களுக்கு நெல் வயல்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதும் பித்தப்பையைக் கடுமையாக குறைக்கலாம். பொட்டாஷ் மற்றும் நைட்ரஜன் சத்துக்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டும் பயன்படுத்தவும். புற ஊதா விளக்குப்பொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஆனைக்கொம்பன்ஈ தொற்று கடுமையாக ஏற்பட்டால் 10%வேப்ப இலைச் சாறு, 5% வேம்பு விதைச் சாறு, 3% தசகவ்யா, 0.3%மீன் எண்ணெய் பிசின் சோப் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி பூச்சியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

ஆனைக்கொம்பன் ஈயின் இயற்கை எதிரிகளான நீளத்தாடை சிலந்தி, வட்டச்சிலந்தி, ஊசித்தட்டான் குளவி போன்றவற்றை வயல்களில் அழியாமல் பாதுகாக்க வேண்டும். இயற்கையாகவே நம் நிலத்தில் உள்ள பூச்சிகளைவிட்டால் அவைகளே தீமை செய்யும் பூச்சிகளை அழித்துவிடும். புழு ஒட்டுண்ணியான பிளாட்டிகேஸ்டர் ஒரைசேவை பயன் படுத்தி ஆனைக்கொம்பன் தாக்குதலைத் தவிர்கலாம்.

நடவு செய்வதற்கு முன் நாற்றுகளின் வேர்களை 0.02% குளோர்பைரிபாஸ் கரைசலில் 12மணி நேரம் ஊர வைத்த பின் நடவு செய்யலாம். பூச்சித் தாக்குதல் இருக்கும் வயல்களில் 10 சதவீதத்திற்கு மேல் பயிர்ச் சேதம் தென்பட்டால் பிப்ரோனில் 100 கிராம், தயாமீதாக்ஸம் 40கிராம் ஆகிய ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கும் போது இந்த ஈயினைக் கட்டுப்படுத்தலாம்.

நாட்டுக்கோழி தீவனத்திற்குக் கரையான்(Termite) உற்பத்தி செய்தல்கரையானின் தீமைகள் குறித்து அறிந்த பலருக்கும் கரையான் தீவனமா...
09/09/2020

நாட்டுக்கோழி தீவனத்திற்குக் கரையான்(Termite) உற்பத்தி செய்தல்

கரையானின் தீமைகள் குறித்து அறிந்த பலருக்கும் கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக்கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகின்றது. கோழிகளுக்கு கரையான் சிறந்த புரதச்சத்து மிக்க உணவாகும். உடல் வளர்ச்சிதை மாற்றத்துக்கு புரதச்சத்து அவசியம் தேவை. கரையான் உற்பத்தி செய்வது செலவே இல்லாத ஒரு தொழில்நுட்பச் செயலாகும்.

100கி கரையானில் அடங்கியுள்ள சத்துக்கள்;

1.புரதம் – 36%

2.கொழுப்பு – 44.4%

சக்தி (Energy) – 560 கலோரி
இத்துடன் சிலவகை கரையான்களில் வளர்ச்சி ஊக்கி (Growth promoter) என்னும், உடல் வளர்ச்சிக் கூட்டுப் பொருள் உள்ளதால் வளர்ச்சி விகிதம் 15% அதிகமாகின்றது. கரையான் வெப்ப நாடுகளைச் சேர்ந்தப் பூச்சியாகும். இது இரவில் மட்டும் செயலாற்றும் உயிரினமாகும். இவை நார்ப் பொருட்களினை உண்டு வாழும். கரையான்களில் பலவகை உண்டு. ஈரக்கட்டைக் கரையானைத் (Dandy wood termites) தான் நாம் எளிதாக உற்பத்தி செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்;

ஒரு பழைய பானை
கிழிந்த கோணி/சாக்கு
காய்ந்த சாணம்
கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள், செம்மண், கரையான் புற்றில் இருந்து மண்.
வைக்கோல்.
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை வாய் அகலமான, மண்பானையில் அழுத்தி வைத்து, சிறிது தண்ணீர் தெளித்து வீட்டிற்கு வெளியே, ஒதுக்குப்புறமாக ஒரு இடத்தில் கவிழ்த்து வைக்க வேண்டும். மாலை நேரத்தில், இந்தப் பானையை வைத்து விட்டால், மறுநாள் காலை அதிக அளவில் கரையான் உற்பத்தி ஆகிவிடும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையான்களினையும் தின்றுவிடும்.

ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத்தொழில்நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம்.

குறிப்பு;

1.அடை மழை பெய்யும் போது, கரையான் உற்பத்தி ஆகாது.

2.எறும்புகள் கரையானுக்கு எதிரி என்பதால், எறும்புப் புற்று இருக்கும் இடங்களில் கரையான் உற்பத்தி ஆகாது.

3.பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த சமயத்தில் கரையான் உற்பத்தி ஆகாது.

4.கோழிகள் கரையான்களை உண்டவுடன் தண்ணீர் கொடுக்கக்கூடாது.

நன்மைகள்;

கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களை தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்தவை ஆகும். கரையானைப் பிடித்து அழிப்பதற்க்குப் பதில் கோழிக் குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம். அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறாக மரம் மற்றும் வீட்டுப் பொருட்களுக்கு தீங்குயிரியாக விளங்கும் கரையானை சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்புமின்றி கட்டுப்படுத்த கோழிகளுக்கு சுவையான புரதச்சத்து மிகுந்த தீவனமாக பயன்படுத்தலாம். இதனால் தீவனச் செலவுகள் கட்டுப்படும்.

இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்யும் முறை!!தக்காளி ஒரு முக்கிய காய்கறிப் பயிராக பயிரிடப்படுகிறது. தக்காளி ஏழைகளின் ஆ...
08/09/2020

இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்யும் முறை!!

தக்காளி ஒரு முக்கிய காய்கறிப் பயிராக பயிரிடப்படுகிறது. தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தக்காளி சாகுபடி செய்வதில் ஒரு முதன்மை பயிராக உள்ளது. இயற்கை வழி வேளாண் முறையில் தக்காளி சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம்.

பருவம் மற்றும் விதை அளவு

ஜூன் – ஜூலை, நவம்பர் – டிசம்பர், பிப்ரவரி – மார்ச், மாதங்கள் தக்காளி சாகுபடிக்கு ஏற்ற பருவங்கள் ஆகும். வண்டல் மண்ணில் நல்ல மகசூலை தரும். ஒரு ஹெக்டரில் பயிரிட 400 கிராம் அளவுள்ள விதை போதுமானது.

நிலத்தை பண்படுத்துதல்

நிலத்தை நன்றாக உழவு செய்து வரப்பு ஓரங்களை மண்வெட்டியால் வெட்டி நன்றக களையில்லாமல் வைக்கவும் பின்பு கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு மக்கிய தொழுவுரம் 10 டன் இடவேண்டும்.

உயிர் உரம் இடுதல்

ஒரு ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம்2 கிலோ, பாஸ்போபாக்டீரியா 2கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி, 2 கிலோ இவற்றை 200 மக்கிய தொழுவுரம் அல்லது மண்புழு உரத்தில் நன்றாக கலந்து அவற்றில் ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரையைத் தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை உயிர் உரக் கலவையில் தெளித்து நன்குபிரட்டி நிழல்பகுதியில் ஒருவாரம் வரை வைத்திருந்து அதன்பிறகு பாத்தியில் உள்ள பார்களில் போட்டு நாற்றுக்களை நடவு செய்து தண்ணீர் விட வேண்டும்.

நடவு செய்யும் முறை

நன்கு பராமரிக்கப்பட்ட நாற்றங்காலில் இருந்து எடுக்கப்பட்ட விரியமுள்ள நாற்றுக்களை அசோஸ்பைரில்லம், விரிடி இவற்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் வீதம் ஒவ்வொன்றிலும் எடுத்து ஆறிய அரிசி வடிகஞ்சியில் கலந்து நாற்றின் வேர்ப்பாகத்தை இவற்றில் நனைத்து அதன்பிறகு பாருக்கு பார் 3 அடியும் செடிக்கு செடி 2அடியும் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். 3 நாட்கள் கழித்து உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு 35 நாட்களில் களை எடுக்க வேண்டும் திருப்ப எப்போதெல்லாம் களைகள் உள்ளதோ அப்போதெல்லாம் களை எடுப்பது அவசியம்.

பயிர் பாதுகாப்பு

ஒரு ஹெக்டேருக்கு 12 எண்ணிக்கை என்ற அளவில் இனக் கவர்ச்சி பெரோமோன்களை அமைக்க வேண்டும்.
பேசில்லஸ் துரின்ஷியன்சிஸ் 2 கிலோ என்ற அளவில் தெளிக்கவும்.
பூஞ்சாணம் தாக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்கவேண்டும்.
பயிர் நடவு செய்த 25 நாட்களுக்கு மேல் செடி ஆங்காங்கே வாடி காய்ந்து விடும். இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த நடவு செய்த ஒரு வாரத்திற்கு பிறகு 50 கிலோ மக்கிய தொழு எரு தூவி விட வேண்டும்.
வேப்பெண்ணெய் 3 சதவீதம், வேப்ப விதை பருப்புச் சாறு 5 சதவீதம் என்ற அளவில் தெளித்து பூச்சி பரவுதலைத் தடுக்க வேண்டும்.
புள்ளியிட்ட அழுகல் வைரசை தடுக்க 10 சதவீத சோள இலைச்சாறு, அல்லது ப்ரோசோபிஸ் அல்லது தேங்காய்ச் சாறு 15 நாள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும்.
கோடை உழவு செய்து கூட்டுப்புழுவின் முட்டைப் பருவத்தைக் கட்டுப்படுத்தலாம்.
ஊடுபயிர் சாமந்திப்பூ சாகுபடி செய்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்
ஆமணக்கு பயிரை வரப்பு ஓரங்களில் வளர்த்து காப்புழுக்களை கவர்ந்து கட்டுப்படுத்தலாம்
ஒட்டுண்ணி அட்டை ஒரு ஏக்கருக்கு 5 சி.சி கட்டலாம்.

இனக்கவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு 5 இடத்தில் வைத்து ஆண் அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்
விளக்குப்பொறி ஒரு ஏக்கருக்கு ஒன்று வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்
என்.பி.வி. கரைசல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்
இஞ்சிப் பூண்டு பச்சை மிளகாய் கரைசல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு10 மில்லி அளவு கலந்து தெளிக்கலாம்
இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கரைசல் தயாரிப்பு முறை

இஞ்சி 250 கிராம், பூண்டு 250 கிராம், பச்சை மிளகாய் 250 கிராம் மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர் மாட்டுக் கோமியம் சேர்த்து இரண்டு நாட்கள் ஊறவைத்து இந்த கரைசலை 300 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு என்ற விகிதத்தில் கலந்து அவற்றுடன் ஒட்டும் திரவம் சேர்த்து 10 நாட்கள் இடைவெளியில் தேவைக்கேற்ப தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

முக்கால் பருவ முதிர்ச்சியில் பழங்களை அறுவடை செய்யவும். அதிக அளவு பழுக்க விடக்கூடாது. பொதுவாக 1 ஹெக்டேருக்கு 15 டன் வரை மகசூல் பெற முடியும். மேற்கண்ட இயற்கை வேளாண் முறைகளின்படி தக்காளி சாகுபடி செய்தால் ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன்கள் வரை நிச்சயம் மகசூல் செய்ய முடியும்.

கட்டுரையாளர்: முனைவர் மு .உமா மகேஸ்வரி, உதவி ஆசிரியர், உழவியல், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம்.

சோளத்தின் நச்சுத்தன்மையும் அதன் பாதுகாப்பு முறைகளும்சோளம் என்பது கால்நடைகளுக்கு மிகவும் முக்கிய தீவனப் பயிராகவும், மனிதர...
27/08/2020

சோளத்தின் நச்சுத்தன்மையும் அதன் பாதுகாப்பு முறைகளும்

சோளம் என்பது கால்நடைகளுக்கு மிகவும் முக்கிய தீவனப் பயிராகவும், மனிதர்களுக்கு உணவாகவும் திகழ்ந்து வருகின்றன. இவற்றில் முக்கிய காரணியாக எதிர் ஊட்டச்சத்து சயனோஜெனீசிஸ் (Anti-nutritional, Cyanogenesis) உள்ளது. இது கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கும் பொழுது மிகுதியான நச்சுத்தன்மை உண்டாகும்.

சயனோஜெனிக் நச்சுத்தன்மை

கால்நடைகளை சோளப் பயிர்களில் மேய்ப்பதினால் ஹைட்ரோசையானிக் அமிலம் (HCN) வெளியிடுவதால் ப்ருசிக் அமில (Prussic acid) விஷம் ஏற்படுகிறது. ஹைட்ரோசியானிக் அமிலம் (HCN) வெளியிடுவதால் சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்களிலேயே கால்நடைகளில் ஆக்ஸிஜன் உறிஞ்சுவதை தடுக்கிறது. இவ்வாறு நடக்கும் போது கால்நடைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கிறது.

நச்சுத்தன்மையைத் தவிர்க்கும் முறைகள்

மண்வளத்தை பராமரிக்க வேண்டும், போதுமான மணிச்சத்து(P) மண்ணில் இருந்தால் ப்ருசிக் அமிலம் (Prussic acid) உற்பத்தியை தடை செய்யும் மற்றும் தழைச்சத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும் வழி வகுக்கும்.
அதிக தழைச்சத்து(N) பயன்படுத்துவதும் ப்ருசிக் அமிலம் ஆனது மிகுதியாக காணப்படும் மற்றும் நைட்ரேட் நச்சுத் தன்மையும் தாவரத்தில் காணப்படும். சமச்சீரற்ற தழைச்சத்தை இடுவதை தவிர்ப்பதன் மூலமாக ப்ருசிக் (Prussic acid) நச்சுத் தன்மை மற்றும் நைட்ரேட் (nitrate) நச்சுத் தன்மையும் அறவே தவிர்த்து விடலாம்.
இவ்வாறு ஆபத்தான தீவனப் பயிரின் முக்கியமான நிலைகளில் (30-45 நாட்கள்) கால்நடைகளுக்கு அளிப்பதை அறவேத் தவிர்க்க வேண்டும்.
விரைந்து வளரக்கூடிய திசுக்களில் அதிக நச்சுத்தன்மை கொண்ட ப்ருசிக் அமிலம் 10 முதல் 14 நாட்கள் வரை இருக்கும்.
முக்கிய குறிப்பு

பனியினால் பாதிக்கப்பட்ட பயிர்களில் ப்ருசிக் அமிலம் மிகுதியாக காணப்படும்.
கால்நடைகளை இவ்வாறு பணியினால் பாதிக்கப்பட்ட பயிரில் மேய்ச்சலை குறைந்தபட்சம் ஒன்றிலிருந்து இரண்டு வாரங்களாவது தவிர்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட கால்நடைக்கு புளி அல்லது சர்க்கரையை முதலுதவியாக வாயில் கரைத்து ஊற்றலாம், அதோடு உடனடியாக கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சை அளிப்பதன் மூலம் இறப்பிலிருந்து காப்பற்றலாம்.

மீன் அமினோ அமிலத்தின் பயன்கள் மற்றும் தயாரிக்கும் முறைகள்மீன் கழிவுகளைப் பயன்படுத்தி  தயாரிக்கப்படும் மீன் அமிலம் என்பது...
26/08/2020

மீன் அமினோ அமிலத்தின் பயன்கள் மற்றும் தயாரிக்கும் முறைகள்

மீன் கழிவுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மீன் அமிலம் என்பது அமினோ அமிலங்களையும், நைட்ரஜன் சத்தையும் கொண்ட ஒரு சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும். மீனில் உள்ள புரதங்கள் நுண்ணுயிர்களால் செரிக்கப்பட்டு அமினோ அமிலங்களாக பிரிகின்றன. இந்த அமினோ அமிலங்களில் நைட்ரஜன் சத்து (தழைச்சத்து) நிறைந்துள்ளது. மீன் கழிவுகள் கிடைக்காத பட்சத்தில் முழு மீன்களையும் பயன்படுத்தலாம். எனினும் முழுமீனை விட மீன் கழிவுகளில் இருந்து தயாரிக்கும் மீன் அமிலம் சிறப்பானதாகும். மீன் அமினோ அமிலத்தை எளிதாக கிடைக்கும் மீன் கழிவுகள், நாட்டுச்சர்க்கரை மற்றும் வாழைப்பழத்தை கொண்டு இயற்கை முறையில் நாமே வீட்டில் தயார் செய்யலாம் .

தேவையான பொருட்கள் :

மீன் கழிவுகள் – 1 கிலோ

பனை வெல்லம் (அ) நாட்டுச்சர்க்கரை – 1 கிலோ

கனிந்த வாழைப்பழம் – 5

தயாரிக்கும் முறை :

ஒரு பிளாஸ்டிக் வாளியில் உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளுடன், சம அளவு பனை வெல்லம் மற்றும் அதனுடன் நன்கு கனிந்த வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக கலக்கி காற்று புகாமல் மூடி வைக்கவும் .
கெட்ட வாயுக்கள் வெளியேறுவதற்காக தினமும் இதனைத் திறந்து மூடவேண்டும்.
நாற்பது நாட்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். இந்த திரவத்திலிருந்து பழவாடை வீசும். இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை தெரிந்து கொள்ளலாம் .
பயன்படுத்தும் அளவு :

இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம் .
ஒற்றை நாற்று நடவாக இருந்தால் 40 ஆம் நாள் ஏக்கருக்கு 1 லிட்டர் அமிலத்தை, 120 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். சாதாரண நடவுக்கு 25 ஆம் நாளிலிருந்து தெளிக்கலாம். இப்படித் தெளிக்கும் போது தண்டுப் பகுதி உறுதியாக இருக்கும்.
கரும்பு பயிருக்கு 250 மில்லி என்ற அளவில் 15 -20 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம் .
கம்பு , சோளம் ஆகிய பயிர்களுக்கு 150 மில்லி என்ற அளவில் 15 லிட்டர் தண்ணீர் கலந்து அடிக்கவும் .
தீவனப்புல் வளர்ப்பவர்கள் மீன் அமிலம் தெளிப்பதன் மூலம் அதிகமான விளைச்சல் பெற முடியும் .
ஒரு முறை தயார் செய்த மீன் அமினோ அமிலத்தை ஆறு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
தேவைப்படும் போது இதனை எடுத்துக்கொண்டு, அதன்பின் அந்த பிளாஸ்டிக் வாளியை காற்றுப் புகாமல் மூடிப் பாதுகாக்க வேண்டும் .
பயன்கள் :

மீன் அமினோ அமிலம் வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது .
பயிருக்கு தழைச்சத்துத் தேவையை பூர்த்தி செய்ய யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம் .
இதனை பூக்கும் தருணத்தில் பயன்படுத்தும் போது பூக்கள் நன்றாக பூக்கும் மேலும் மகரந்த சேர்க்கை நன்றாக நடைபெற்று காய்க்கும் திறன் அதிகரிக்கும் .
இந்த அமிலம் சுற்றுச்சுழலுக்கு எந்த விதமான பாதிப்புகளையும், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது .
மீன் அமிலம் 75 சதவீதம் வளர்ச்சி ஊக்கியாகவும், 25 சதவீதம் பூச்சி விரட்டியாகவும் செயல்படக் கூடியது.
மீன் அமிலம் தெளிக்கும் போது பயிர்கள் நன்கு பச்சைபிடித்து வளரும்.
வரப்பு மற்றும் வேலி ஓரங்களில் தெளித்தால் மயில், முயல் மற்றும் எலி தொந்தரவு தெளித்த ஐந்து நாட்கள் வரை இருக்காது, தேவைப்பட்டால் மீண்டும் தெளிக்கலாம்.
செய்யக்கூடாதவை:

மீன் அமிலம் கொடுக்கப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதற்கு மேல் பயன்படுத்தினால் பயிர்கள் வாடிவிடும்.

இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள்!இயற்கை விவசாயத்தில் ஊடுபயிர் சாகுபடி என்பது ஒரு அங்கமாகும். எல்லா விவசாயிகளும் ஒரே பய...
19/08/2020

இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள்!

இயற்கை விவசாயத்தில் ஊடுபயிர் சாகுபடி என்பது ஒரு அங்கமாகும். எல்லா விவசாயிகளும் ஒரே பயிரை மட்டும் நம்பியிராமல் அதனுடன் மற்றொரு பயிரையும் சேர்த்து சாகுபடி செய்தோம் என்றால் கொஞ்சம் அதிகமாக வருமானம் எடுக்க முடியும் அதாவது மானாவாரி பகுதியில் விவசாயிகள் சோளத்தை மட்டும் பயிர் செய்தீர்கள் என்றால் குறைந்த லாபம் மட்டும் பெற முடியும். ஒருவேளை மழை பொய்த்து விட்டது என்றால் சோளப்பயிர் நமக்கு நஷ்டத்தை தந்து விடும். எனவே அந்த சோளப்பயிர் நடுவே வேறு ஏதேனும் ஊடுபயிர் போட்டு இருந்தால் அதன் மூலம் நமக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக ஊடுபயிர் மூலம் 40 லிருந்து 60% கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது

ஊடுபயிரின் அவசியம் மற்றும் அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்:

முதன்மை பயிருக்கு பாதுகாப்பு அரணாகவும், நோய் பூச்சித் தாக்குதலை தடுத்தும் விடுகிறது.
மண் வளம் பெருகி, நுண்கிருமிகள் மூலம் மண்ணிற்கு தேவையான அங்ககச் சத்தை அதிகரிக்கச் செய்துவிடுகிறது.
ஒரு இலை தாவரங்களான சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்ற பயர்களில் இரு இலை தாவரமான பாசிப்பயிறு, தட்டபயிறு, நிலக்கடலை, உளுந்து போன்றவற்றை ஊடுபயிராக பயிரிடலாம்.
மானாவாரி நிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் இலைகளின் மூலம் தான் 80% தங்களுக்குத் தேவையான உணவு உற்பத்தியை சூரிய ஒளியின் மூலம் எடுத்துக்கொள்கின்றன. சூரிய ஒளி இலைகளில் அதிக அளவு இருந்தால் உணவு உற்பத்தி கூடவோ குறையவோ வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இந்த சூரிய ஒளியை சற்று குறைக்கும் விதத்தில் நாம் ஊடு பயிர் செய்தால் நிச்சயம் நமக்கு லாபம் கிடைக்கும்.
விவசாயிகளின் மந்திரம் எப்படி இருக்க வேண்டும் என்றால் “ஒரு மடங்கு நிலம், இருமடங்கு உற்பத்தி, மூன்று மடங்கு லாபம்” என்ற விதத்தில் இருக்க வேண்டும்.
கட்டுரையாளர்: என்.மதுபாலன், ஓய்வுபெற்ற வேளாண் துணை இயக்குனர், தர்மபுரி மாவட்டம். தொடர்புக்கு: 9751506521

Address

Kavanthandalam Village
Kanchipuram
631603

Telephone

00919884489999

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.V.V Organic Integrated Farming System posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.V.V Organic Integrated Farming System:

Share

Category