Indian Native Pet's

Indian Native Pet's Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Indian Native Pet's, Pet service, Coimbatore chettipalayam, Coimbatore.

15/06/2025

பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் இந்த சூழ்நிலையை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வோம். நமது வீட்டில் வீணாகும் புளியங்கொட்டை மற்றும் பலா விதை, மா விதை, கொடுக்காப்புளி விதை மற்றும் நாம் உண்ணும் அனைத்து பழங்களின் விதைகளையும் வீட்டில் வீணாக குப்பையில் கொட்டும் விதைகளை சேகரித்து சாலை ஓரத்தில் பள்ளமாக உள்ள பகுதியில் நீர் தேங்கும் பகுதியில் விதைத்தாலோ தூவினாலோ ஒரு சில ஆண்டுகளில் அவை மரங்களாக வளரும் இல்லையேல் மண்ணுக்கு உரமாக மாறும் ஆகவே நமது வீட்டு குழந்தைகளுக்கும் விதைகளை விதைக்கும் பழக்கத்தை உருவாக்குவோம்...

14/05/2025

#மண்ணில்_உள்ள_கார்பன்
மண்ணில் உள்ள கார்பன் அளவு குறைய காரணம்.
காற்றில் இவ்விதம் CO2 அதிகரிக்கும் இதே வேளையில் மண்ணில் உள்ள கரிம கார்பன் அளவு குறைந்து வருகிறது. மண்ணில் உள்ளதை கரிம கார்பன் என்றும் கனிம கார்பன் என்றும் பிரிக்கலாம். கரிக கார்பன் என்பது உயிரினங்கள் மூலம் மண்ணில் சேரும் கார்பன் ஆகும். (C-C bond and C-H compound, e.g Cellulose, lignin) இதுவே மண் வளத்திற்கு காரணமாகிறது. கனிம கார்பன் என்பது பாறைகளில் இருந்து வரும் கார்பன் ஆகும். கார்பன் அளவை அதிகரிக்க இயற்கை வழியில் மண்ணை வளமாக்க வேண்டும். உயிரினங்களின் மூலம் மண்ணில் உள்ள கரிம கார்பன் அளவை அதிகரிக்கலாம்.
மரங்கள் வளர்ப்பதின் மூலம் ஒரு மரத்தில் லட்சக்கணக்கான பூச்சி புழுக்கள் வாழும் நூற்றுக்கணக்கான பறவைகள் வாழும் இவை இரண்டும் ஒன்றை சார்ந்து மற்றொன்று வாழும் பறவைகளின் எச்சம் மண்ணில் உள்ள மண்புழு போன்ற புழு வகைகளை அதிக அளவில் உருவாக்கும் இதனால் மண்வளம் பெருகும்.
மரம் நடுவோம் சுவாசத்தை காப்போம்... மரம் நடுவோம் மனிதத்தை காப்போம்... தினம் ஒரு மரம் நடுவோம்...

14/05/2025

#மரம்_வளர்ப்பதினால்_ஏற்படும் #கார்பன்_சுழற்சி
மண்ணில் உள்ள உயிரினங்கள் தாவரங்கள் அனைத்தும் கரிம கார்பனால் ஆனது என்பதால் மண்ணில் மரங்கள் எண்ணிக்கை குறையக்குறைய காற்றில் கார்பன் அளவு அதிகரிக்கிறது. இதை ஈடு செய்ய மரங்கள் வளர்ப்பது அவசியமாகிறது. மரங்கள் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை (CO2) உறிஞ்சி, ஒளிச்சேர்க்கை மூலம் எடுத்துக்கொண்டு தாவரங்களில் சேமிக்கிறது, தாவரத்தை உண்ணும் விலங்குகளில் சேருகிறது, தாவரம் மற்றும் விலங்குகள் இறந்த மண்ணில் விழும்போது மண்ணிலும் கரிம கார்பனாக சேருகிறது. மரம் வளர்ப்பதினால் நுண்ணுயிரிகளும் பெருகுகிறது. அதை மீண்டும் மண்ணில் விழுந்து விதைத்து மரமாகவும் உரமாகவும் நமக்கு நன்மை செய்கிறது.
மரம் நடுவோம் சுவாசத்தை காப்போம்... மரம் நடுவோம் மனிதத்தை காப்போம்... தினம் ஒரு மரம் நடுவோம்...

14/05/2025

#ஒரு_மரம்_சேகரிக்கும்_கார்பன்
ஒரு மரம் சேகரிக்கும் கரிம கார்பன்
ஒரு முதிர்ந்த மரம் ஒரு வருடத்தில் சுமார் 22 கிலோ கார்பன் டை ஆக்சைடை (CO2) எடுத்துக்கொண்டு ஒளிச்சேர்க்கை கரிம பொருளாக சேமிக்கிறது. அதே நேரத்தில் காற்றில் வெளியிடப்படும் ஆக்சிஜன் 120 கிலோ ஆகும். அந்த மரம் வெளியிட்ட ஆக்சிஜனில் இருந்து 20 -40 சதவீதத்தை சுவாசிப்பதற்காக அந்த மரம் மீண்டும் எடுத்துக்கொள்ளும் என்பதால் 87 – 104 கிலோ வரை ஒரு மரம் ஒரு ஆண்டில் வெளியிடுகிறது. வீட்டுக்கு ஆளுக்கு ஒரு மரம் வளர்த்தால் நாமும் நமது தலைமுறையும் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். இன்று நோய் நொடி இல்லாமல் வாழ மூல காரணம் காற்றை மாசில்லாமல் காப்பதே ஆகவே
மரம் நடுவோம் சுவாசத்தை காப்போம்... மரம் நடுவோம் மனிதத்தை காப்போம்... தினம் ஒரு மரம் நடுவோம்...

14/04/2025

இயற்கை நமக்குத் தந்த
உணவையும் குடிநீரையும்
கொஞ்சம் பறவைகளுக்கும்
பகிர்ந்து தருவோம்
இந்த கோடையில்!!

10/04/2025

#மணிச்செடி_Money_Plant— ஒரு சிறப்பு கட்டுரை.

மணிச்செடி அல்லது "Money Plant" என்பது இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வீடுகளில் அதிகமாக காணப்படும் ஒரு அழகான மற்றும் பலன்கள் நிறைந்த செடியாகும். இதை வழக்கமாக பிளாஸ்டிக் பாட்டில்கள், பீப்பாய் குடுவைகள் அல்லது சிறிய குடில்களில் வளர்க்கின்றனர். இச்செடியின் அறிவியல் பெயர் Epipremnum aureum ஆகும். இது பொதுவாக "Devil’s Ivy" என்றும் அழைக்கப்படுகிறது.

பணிச் செடியின் சிறப்பம்சங்கள்:
எளிதாக வளர்க்கக்கூடியது
Money Plant எளிதில் வளரக்கூடிய செடியாகும். இதற்குப் பெரிதாக பராமரிப்பு தேவையில்லை. இலைகள் வெறும் தண்ணீரிலும் வளர்கின்றன. குறைந்த ஒளி மற்றும் நீர் இருந்தாலுமே செடி நன்றாக வளர முடியும்.

அழகு மற்றும் உளரசு
அதன் பச்சை இலைகள் வீட்டிற்குப் பொலிவையும் அமைதியையும் தருகின்றன. இது உள்ளக அலங்காரமாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வீட்டிற்கு அழகு சேர்க்கும் விதமாக மாடியில், மேசை மீது அல்லது சுவரில் தொங்கும் வகையில் வளர்க்கப்படலாம்.

பணவளர்ச்சிக்கு உதவும்
வாஸ்து மற்றும் பங்க்ஷுயி நம்பிக்கைகளின்படி, Money Plant வீட்டில் பணவளர்ச்சி, செழிப்பு மற்றும் நன்மைகளை ஈர்க்கும் என நம்பப்படுகிறது. இது குறிப்பாக வடகிழக்கு மூலையில் வைக்கப்பட்டால் நன்மைகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.

காற்றை தூய்மைப்படுத்தும் தன்மை
NASA-வின் ஆய்வுகளின்படி, Money Plant காற்றில் உள்ள விஷ வாயுக்களை சீராக வடிகட்டி தூய்மையாக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இதனால் இது வீட்டின் உட்புற சூழலுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.

உறவுகளுக்கு நல்ல பலனை தரும்
Money Plant-ஐ அன்பான ஒருவர் கொடுத்தால், அந்த உறவு நீடிக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் இது பரிசாக வழங்கப்படுவது வழக்கமாகிவிட்டது.

முடிவுரை:
மணிச்செடி ஒரு சாதாரணமான செடியாகத் தோன்றினாலும், அதன் பல்வேறு நன்மைகள், அழகு, பராமரிக்க எளிமையான தன்மை மற்றும் நம்பிக்கைகள் இதை மக்களிடையே மிகவும் பிரபலமாக்கியுள்ளன. உங்கள் வீட்டிலும் ஒரு மணி செடியைப் வளர்க்குங்கள் — இது உங்களுக்குச் செழிப்பு, அமைதி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டுவரும்!

09/04/2025

#மரத்தின்_அருமை அதில் வாழும் பூச்சி புழுவிற்கு தெரியும்...
மரத்தின் அருமை அதில் வாழும் பறவைகளுக்கு தெரியும்...
மரம் மரத்தின் அருமை இந்த நிழலில் சுகத்தை அனுபவிப்பவர்களுக்கே தெரியும்...
ஆனால் மரத்தின் அருமையும் மரத்தின் பெருமையும் மரத்தின் தியாகமும் மனிதனுக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது...
என்றும்
பசுமை பணியில் உங்கள் முனைவர்.ம.வாசிம் ராஜா

09/04/2025

நாம் விவசாய நிலங்களை அளித்துக் கொண்டிருக்கிறோம் சவுதி அரேபியாவிலோ பாலைவனத்தில் விவசாய நிலங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சிந்தியுங்கள் சிந்தித்து செயல்படுவோம்...

09/04/2025

வெப்ப காலங்களில் நீர்நிலைகள் வறண்டு விடுவதால் பறவைகள் தண்ணீர் தேடி அலைகின்றன. நாம் வீட்டில் வைக்கும் ஒரு நீர் தொட்டி அவற்றுக்கு பெரும் உதவியாக இருக்கும் பல்லுயிர் ஓம்புதலே நமது தலையாய கடமை!

என்றும் பசுமை பணியில் உங்கள் முனைவர்.ம.வாசிம் ராஜா

03/04/2025

மனிதன் இன்றி மரங்கள் வளரும் மரங்கள் இன்றி மனிதன் வாழ முடியாது...

மரம் நடுவோம் சுவாசத்தை காப்போம்... மரம் நடுவோம் மனிதத்தை காப்போம்... தினம் ஒரு மரம் நடுவோம்...

20/03/2025

ிட்டுக்குருவி_தினம்!

உயிர் சங்கிலியின் ஒரு அங்கமாக விளங்கும் சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம்.

சிட்டுக்குருவியின் சிறகுகள் பறக்க, அதன் குரல்கள் தொடர்ந்து ஒலிக்க, அவற்றை பாதுகாப்போம்! இயற்கையை வளமாக மாற்ற உறுதி ஏற்போம்!

Address

Coimbatore Chettipalayam
Coimbatore
641201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indian Native Pet's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category